பக்கம்:அறிவியல் விருந்து.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஓரிடத்தான்கன் #39 இன்றன. இதனால் அப்பகுதியில் ஆறாத புண் தோன்றி நோயாளியை உயிருடன் கொல்லும் நிலைமை ஏற்படு கின்றது. உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுத்து அவற்றை அழிக்கும் தன்மை வாய்ந்த கதிரியக்கக் கதிர்கள் புற்று: நோய் அணுக்களை அழிக்கப் பயன்படுகின்றன. இந்த நோயை ஒழிப்பதற்கு முதலில் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத் திர்ை. பிறகு ரேடியத்தைப் பயன்படுத்தி வன்மை வாய்ந்த கதிரியக்கக் கதிர்களைக் கையாளும் முறை வந்தது. இக் கதிர்களை அளவறிந்து கட்டுப்படுத்துவது மிகக் கடினம். செயற்கைக் கதிரியக்கம் கண்டறியப்பெற்ற பிறகு இத் துறையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சதிரி யக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவை யான அளவு கதிர்களைப் பெறலாம். மேலும், இன்று புற்று நோய் சிகிச்சையில் கதிரியக்கச் சோடியம்போன்ற பொருள்கள் பயன்படுகின்றன. கதிரியக்கச் சோடியத்தைப் புற்றுநோயுள்ள இடத்தில் வைத்துவிட்டால் அது விரை வான பீட்டா-கதிர்களை வெளிவிட்டுப் புற்றை அழிக் கின்றது; புற்றை விளைவிக்கும் கிருமிகள் மடிந்துவிடு கின்றன. இது விரைவில் தன் கதிரியக்க இயல்பை இழந்து விடுவதால் இச்சிகிச்சை ரேடியத்தைப்போல் வரம்பு கடந்துசென்று அபாயகரமான கோளாறுகளை விளைவிப் பதில்லை. கதிரியக்கச் சோடித்தின் அரை-வாழ்வு 15 மணி நேரம்: ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 பாண்டுகள். ஆனால் இந்தச் செயற்கைப்பொருள் சம எடையுள்ள ரேடியத்தைவிடப் பத்து இலட்சம் மடங்கு அதிகக் கிளர்ச்சி யுள்ளது என்று கணக்கிடப் பெற்றுள்ளது. அன்றியும், சோடியத்தினின்றுத் தோன்றும் மக்னீசியம் என்னும் தனிமமும் உடலில் எளிதில் கலந்துவிடும். மக்னீசியம் உப்பால் உடலுக்கு யாதொரு தீங்கும் இல்லை. எனவே, சிகிச்சை முடிந்த பிறகு இதனை உடலினின்றும் வெளியே அகற்றவேண்டிய இன்றியமையாமையும் இல்லை.