பக்கம்:அறிவியல் விருந்து.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fళీ அறிவியல் விருந்து அவ்வொழுக்குள்ள இடத்தைக் கண்டறிந்துவிடலாம். இக்குழல்கள் சுவரின் உட்புறமாக அமைந்திருந்தாலும், பூமியின் அடியில் புதைந்திருந்தாலும் குழலிலுள்ள குறையை அறிந்து கொள்ள முடியும். தேய்மானத்தைக் காண்பதிலும் கதிரியக்க ஓரிடத் தான்கள் பயன்படுகின்றன. இச்செயல் உற்பத்தியாளர் களுக்குப் பெரிதும் பயன்படுகின்றது. டீ.செல் எண் ணெய்ப் பொறிகளிலும் காஸோவின் எண்ணெய்ப் பொருள்களிலுமுள்ள ஊடியங்கியிலுள்ள* வளையங் களின் தேய்மானத்தைக் கான கதிரியக்க ஓரிடத்தான்கள் அதிகமாகப் பயன்படுகின்றன. இன்று அமெரிக்காவில் பல நிறுவனங்களில் இவை கையாளப்பெறுகின்றன. சோதனை செய்யப்பெறவேண்டிய பொறியின் பகுதியை 'ஒக்ரிட்ஜ் என்னும் இடத்திற்கு அனுப்பி அங்குள்ள அணு உலையில் வைத்துக் கதிரியக்கமுடையதாகச் செய் வர். பிறகு அதனை அதற்குரிய பொறிகளில் பொருத்திப் பொறியினை இயங்கும்படி செய்வர். பொறி இயங்கிக் கொண்டிருக்கும்பொழுதே அடிக்கடி வழுக்கிடு பொரு ளைச் சிறிது சிறிதாக எடுத்து அதிலுள்ள கதிரியக்க அளவு அறுதியிடப்பெறும்; இதிலிருந்து தேய்மானத்தின் அளவு கணக்கிடப்பெறும். இம்முறை இன்று அமெரிக் காவில் எங்கணும் பெருவழக்காக உள்ளது. பழைய முறையில், சோதனை செய்யவேண்டிய பகுதியை முதலில் நிறுத்து அதன் எடை காணப்பெறும். சிறிதுகாலம் பொறி ஓடியபிறகு மீண்டும் அப்பகுதியின் எடை தீர் மானிக்கப்பெறும். எடைவேற்றுமையிலிருந்து தேய்மானம் கணக்கிடப்பெறும். இதனால் பொறியிலிருந்து மேற்படி பகுதியை நீக்குவதற்கு ஆகும் காலம், மீண்டும் அதனைப் 14. aastą ujišist-Piston,