பக்கம்:அறிவியல் விருந்து.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்க ஓரிடத்தான்கள் #47 பொருத்துவதற்கு ஆகும் காலம், அக்கால முழுதும் அந்தப் பொறி இயங்காதிருப்பதால் ஏற்படும் இழப்பு ஆகிய வற்றால் செலவு அதிகமாகும். கதிரியக்க ஓரிடத்தான் முறையில் ஒரு சில மணி நேரச் செலவுதான் ஏற்படும்; கிடைக்கும் புள்ளிவிவரங்களும் நம்பத் தகுந்தவையாக இ.iள்ளன. எதிர்காலத்தில் கதிரியக்க ஒரிடத்தான்கள் எண்ணற்ற முறைகளில் பயன்படப்போகின்றன. இத்துறையில் 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்ற நிலைதான். இதை நன்றாக எண்ணி இளைஞர் உலகம் அறிவியலை ஆழ்ந்து பயின்று ஆராய்ச்சிப் பாதையில் செல்ல முனைய வேண்டும். அனைத்தைவும் பயன்படுத்துவது அவர்கள் கையில்தானே உள்ளது? அந்த நாள் என்று வருமோ?