பக்கம்:அறிவியல் விருந்து.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்பொருட் கலையில்... #55 ஆகவே, பூமிக்குமேல் காற்று மண்டலத்திலுள்ள கதி ரியக்கக் கரி விரைவாகவோ மெதுவாகவோ உயிரிய அணுக்களுடன் கலந்து கதிரியக்கமுள்ள கார்பன்-டைஆக்ஸைடு மூலக்கூறுகளையும் (அத்துடன் கலந்த கார்பன் மானாக்ஸைடு மூலக்கூறுகளையும்) உண்டாக்கும். எல்லாக் காலத்திலும் காற்றில் கதிரியக்கமற்ற கார் பன்-டை-ஆக்ஸைடு இருந்துகொண்டே இருக்கின்றது. கார்பன்-டை-ஆக்ஸைடின் கதிரியக்கமுள்ள அணுக்கனை யும் கதிரியக்கமற்ற அணுக்களையும் காற்று நன்றாக ஒன்றுசேர்த்துக் கலக்குமாறு செய்துவிடுகின்றது. தாவரங்கள் சிறிய அளவுகளில் கதிரியக்கக் கார்பன். டை-ஆக்ஸைடையும் பேரளவுகளில் சாதாரணக் கார் பன்-டை-ஆக்ஸ்ைடையும் ஏற்றுத் தன்வயமாக்கிக்' கொள்ளுகின்றன. ஆதலால்தான் தாவரங்களிடமும் அவற்றை நேராகவோ மறைமுகமாகவோ உண்ணும் பிராணிகளிடத்திலும் கதிரியக்கக் கரி உள்ளது. தாவரங்களும் பிராணிகளும் உயிரோடிருக்கும் வரை யிலும் அவை தம்மிடமுள்ள கதிரியக்கக் கரியினை ஒரே அளவில் வைத்துக்கொண்டேயிருக்கும்; அஃதாவது, தாம் இழக்கும் கரியினை ஈடுசெய்துகொண்டேயிருக்கும். அவை தாம் இறக்கும் தருணத்திலிருந்து தாம் கொண்டுள்ள கதிரியக்கக் கரியில் 5,600 யாண்டுகட்கு ஒருமுதை 50 சதவிகிதம் இழந்துகொண்டேயிருக்கும்; இந்தக் கரி ஈடு செய்யப்பெறுவதில்ல்ை. இதையே இன்னும் சற்றுத் திட்டமாக விளக்குவோம். உயிரி" உயிரோடிருக்கும் பொழுது அது தான் கொண்டுள்ள கரியின் ஒவ்வொரு கிராம்.அளவிலும் மணித்துளியொன்றுக்கு 15.3 பிரிந்தழிதல் 37. Æsiratu varr gép-Assimilation 38. *-u?iff-Organism.