பக்கம்:அறிவியல் விருந்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 37 இதனாலேயே 92 அணுக்களுக்குமேல் நேர்இயல் மின்னிகள் ஒருங்குகூடி அணுவாகச் சமைவதில்லை. 92க்கு மேலும் நேர் இயல் மின்னிகள் கூடத்தான் செய்கின்றன. ஆனால், அவை எளிதில் சிதைந்து அழிகின்றன. 88க்கு மேலே உள்ள அணுக்களில் கட்டு ஆட்டம்கோடுக்கத் தொடங்குகின்றது. யுரேனிய அணு 92 அனு:எண் உடையது. அஃது ஆட்டம் கொடுக்கும் நிலையில் சில ஒளிகள் வீசுவதை அறிவியல் புலEர்கள் கண்டனர்; இவை யாவும் காணா ஒளிகனே இவ்வொளிகள் மூன்றுவகைக் கதிர்களாக வெளிவருகின்றன. இவற்றினை ஆல்ஃபா-கதிர்கள் என்றும், பீட்டா-கதிர்கள் என்றும், காமா-கதிர்கள் என்றும் பெயரிட்டு வழங்குவர் ஆல்ஃபா-கதிர் என்பது பரிதியக் கரு, பீட்டா-கதிர் என்பது எதிர்மின்னி, காமாகதிர் என்பதோ புதிர்க்கதிர்* போன்றதொரு கதிராகும். யுரேனிய அணுகுண்டில் இம்மூவகைக் கதிர்கள் எழுந்துதான் ஹிரோஷிமாவை அழித்தது; நாகசாகியை நாசமாக்கியது. இந்த யுரேனியச் சிதைவுதான் இவ்வுலகில் வாழ்கின்ற நமக்கு மிகவும் இன்றியமையாதது. சதா குளிர்ந்துகொண்டிருக்கும் புவி அடியோடு குளிராமல் இருப்பதற்கு இது துணை செய்கின்றது. குளிர்ந்து வருவதால் ஏற்படும் குறைவினை யுரேனியம் வெளிவீசும் வெப்பம் நிறைவுசெய்கின்றது. புவி குளிர்ந்துகொண்டு வரும் அளவினையும் அதனை ஈடு செய்யப் புவியில் சவ்வளவு யுரேனியம் இருக்க வேண்டும் என்பதையும் அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த அளவுக்குமேல் யுரேனியம் புவிக்குள் இருந்தால் அதிலிருந்து வரும் வெப்பத்தினால் பூமி வெடித்துப் போகும் என்று அவர்கள் கருதுகின்றனர். அணுவில் உறைந்துள்ள ஆற்றல்: அணுத் திரளைகள் அணு அனுவாக உடையும்பொழுது முன் அடங்கிக் 18. புதிர்க் கதிர்-X-Ray.