பக்கம்:அறிவியல் விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறிவியல் விருந்து கிடந்த ஆற்றல் பின்னே வெளிப்பட்டு வெப்பமாக எழு கின்றது. வேதியியல் மாற்றத்தில் வெளிப்படும் வெப்பம் இதுதான். அணுவே சிதையும்போது இதைப்போல் பல் லாயிரம் மடங்கு வெப்பம் வெளிப்படுகின்றது. மின்னிகள் அணுவாகக் கட்டுண்டபோது உட்கொண்ட ஆற்றலையே அணுவின் கரு சிதைவுற்றுக் கக்குகின்றது. ஒரு கிராம் எடைகள் இர கரியில் கிடைக்கும் அணுத்திரளைகள் சிதைந்து எரிந்தால் 8 ஆயிரம் கனலி வெப்பம் எழும். ஆனால், ஒரு கிராம் கரியில் அணுச்சிதைவு ஏற்பட்டால் 16,000 கோடி கனலி வெப்பம் வெளிப்படுகிறது. எனவே, அணுத்திரளையின் சிதைவினால் கரி எரியும்போது ஏற் படும் ஆற்றலைவிட அணு சிதையும்போது எழும் ஆற்றல் 2 கோடி மடங்கு மிகுதியாகும் என்பதாகின்றது. ஒரு பட்டாணி அளவு நிலக்கரியின் அணுக்களைச் சிதைத்து ஒரு கப்பலை அட்லாண்டிக் மாபெருங் கடலைத் தாண்டி ஒடச் செய்யலாம் என்று சணக்கிட்டுக் கூறுவர் அறிவியல நிஞர்கள். அரைவிரற்கடை அளவு நிலக்கரி அணுக்களைச் சிதைத்து ஐந்து இரயில் வண்டியில் ஏற்றிவரும் நிலக்கரி எரிவதால் உண்டாகும் வெப்பம் அளவு வெளிப்படுத்தலாம் என்றும் அவர்கள் பேசுவர். இன்று அணுவினைத் தாக்கி உடைப்பதற்கு நேர் இயல் மின்னி, இருநி'" ஆல்ஃபா-கதிர், பொது இயல் மின்னி ஆகிய நான் கினைப் பயன்படுத்து கின்றனர். இவற்றைச் சுழலினி' என்ற கருவியின் துணை கொண்டு இயக்கி அணுவினைச் சிதைக்கின்றனர். இயற்கை அன்னையின் கையழுத்தம்: அணுவினைப் பற்றி எல்லாம் அறிந்துவிட்டோம் என்று எண்ணுவது 19. sers?-Calorie. 20. Gojš-Deuteron. 21. *paśams-Cyclotron.