உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் விருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவின் அளப்பரிய ஆற்றல் 3త్తి தவறு. அணு ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. இதற்கு முடிவும் இல்லை. 'அறிதோறும் அறியாமை கண்டற் றால்." அணு பொருளா? ஆற்றலா? அலையா? என்று திட்டமாக வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. நம் முடைய இயற்கை அன்னை என்ன என்ன மறைத்து வைத்துள்ளாள் என்பதை அறிவது எளிதன்று. இப் பெருமாட்டி வாரி வழங்கும் வள்ளல் அல்லள்; கையழுத் தம் மிக்கவள், அறிவியலறிஞர்கள் துப்பறியும் சோத கர்கள் நிலையிலிருந்து கொண்டு இவள் மறைத்து வைத் திருக்கும் பொருள்களை ஆராய்ந்து வருகின்றனர். அப் பொருள்களால் எதிர்கால உலகம் எல்லா நலன்களையும் எய்த வேண்டும். இறுவாய் : இஃது அணுயுகம். "அணுவிற்கு அணு வாகி’ என்று அருள் நூல்கள் பாராட்டும் அணுவைத் துருவித் துருவி ஆராயுங் காலம்; அண்டங்களின் அமைப்பும் அணுவின் அமைப்பும் ஒன்றே என்று உலகிற்கு எடுத் தியம்பிய காலம். இவ்வளவும் அறிவுத் தின வால் ஏற்பட்ட விளைவு மட்டிலும் அன்று; ஆன்ம அமைதிக்கும் இந் நிலை இன்றியமையாதது. நம்முடைய சடநிலை வாழ்வும் ஆன்ம வாழ்வும் உயரவேண்டுமானால் அணு ஆராய்ச்சி யால் கண்ட உண்மைகள் சமுதாய நலனுக்குப் பயன்படும் வழிகளை வகுக்க வேண்டும். தாருக வனத்து முனிவர்கள் அபிசார யாகத்திலிருந்து கிளப்பிவிட்ட களிறு, பாம்புகள் முதலியவற்றைச் சிவபெருமான் பயன்படுத்திக் கொண்ட தைப்போல அறிவியலறிஞர்கள் சோதனைச் சாலையில் கண்டறிந்த அணுக்குண்டின் ஆற்றல்களை மக்கள் வாழ்வின் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அணு வாற்றலை ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களை அழித்தது போன்ற அழிவு வேலைக்காகப் பயன்படுத்திய முறையை ஒழித்து அதனை உழவு, மருத்துவம், ஆலைத்