பக்கம்:அறிவியல் விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 4? தொழில் முறைகளில் காண்கிறோம். குடிவழி அறுதி விட்டிருக்கும் எல்லைக்கு மீறி செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது வீணே; ஆனால் குழந்தைகள் குடி வழியாகப் பெற்ற திறன்களையும் ஆற்றல்களையும் அவ்வவற்தின் எல்லைக்குள் சிறந்த முறையில் வளர்வதற்குச் சாதகமான வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையை உண்டாக்குவதில் ஆசிரியர் எப்பொழுதும் துணை செய்யலாம் என்பதை உணர்தல் வேண்டும். தக்க சூழ்நிலையை அமைத் துக் கொண்டதால் தான் அண்மைக்காலத்தில் ஜப்பான் வியத்தகு முறையில் புத்துயிர் பெற்றுப் பொலிவதை உலக வரலாறு தமக்கு எடுத்துரைக்கின்றது. நாற்பது யாண்டுகட்கு முன்பு மிகவும் பிற்போக்கிலிருந்த இரஷ்யா இன்று கீழ்நாடுகளில் ஆற்றல் மிக்க நாடாகக் காட்சியளிக்கின்றது. விண்வெளிப் பயணத் தில் சில கூறுகளில் அமெரிக்காவையும் விஞ்சி நிற்கின்றது. வேறு சிலர் குடிவழியை அறவே புறக்கணித்து, கல்விப் பயிற்சி, முயற்சி முதலிய சாதகமான வாய்ப்புகள் அடங்கிய சூழ்நிலையால் மனிதத் திறமைக்குள்ளடங்கிய அனைத்தை யுமே எல்லாரிடமும் எய்துவிக்கலாம் என்று வரம்பிகத்து கருதுகின்றனர். இவர்கள் இன்பத்தையே எதிர்நோக்கும் இறுமாந்த மனப்பான்மையால் தவறிழைத்துப் பெற முடியாததைப் பெற முயல்வதில் ஏராளமான முயற்சி காலம், பணம் ஆகியவற்றைப் பாழ்படுத்துகின்றனர்; தம்முடைய குழந்தைகளின் ஆற்றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட பொறியியற் கல்வியையும் மருத்துவக் கல்வி யையும் மேற்கொண்டு பல்வேறு செல்வாக்குகளினால் அக் கல்லூரிகளில் நுழையவும் இடம் பெற்றுத்-திண்டாடுவதை நாம் காணாமல் இல்லை. இவர்கள் இடம் பெற்ற நாள் தொட்டு தேர்வில் வேற்றி பெற்றுப் பதவிகளில் அ மரும்வரை அ ைன த் ைத 4 ம் செல்வாக்குகவி ஐாலேயே நிறைவேற்ற முயலுகின்றனர். எவ்வளவு