ஞாயிற்றுக் குடும்பம் శ్రీః வருகின்றன. இவை யனைத்தும் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக் குடும்பம் என்ற பெயரினைப் பெறுகின்றன. முதலில் ஞாயிற்றினைப்பற்றிய செய்திகளைக் காண்போம். 2 ஞாயிறு இந்திலவுலகில் வாழ்ந்து வரும் உயிர்கட்கு உயிர் நாடியாக இருப்பது ஞாயிறு. ஞாயிற்றின் ஒளியும் வெப்பமும் கிடைத்திராவிடில் பூமியில் எந்தவித உயிரும் தோன்றியிராது. பூமியும் பிற கோள்களும் தத்தம் வாழ்வு நலன்களைக் கதிரவனிடமிருந்தே பெறுகின்றன: இந்நிலவுலகில் வாழும் மக்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டினர், கதிரவன் அருளிய மழைக்காகவும், அதனால் தாம் பெற்ற உழவுச் செல்வத்திற்காகவும் அவனுக்குப் புதுப்பானைகளில் பொங்கலிட்டுப் படைத்துத் தம் நன்றி யறிதலைப் புலப்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய சூரியன் வாயுநிலையிலுள்ள ஒரு பெரிய நெருப்புக் கோளம். இதன் குறுக்களவு 8,67,000 மைல், இது பூமியின் குறுக்களவை விட சுமார் 180 மடங்கு பெரியது. 180 பூமிகளை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அடுக்கினால் கதிரவனின் குறுக்களவிற்கு ஒப்பாகும். அதன் மேற்பரப்பு நிலவுலகின் மேற் பரப்பில் 12,000 மடங்கு பேரியது. இதன் பருமன் 13,00,000 மடங்கு பூமியின் பருமனாகும், அதன் நிறையோ 198x10' டன்கள் எனத் கணக்கிட்டுள்ளனர். கதிரவனின் திண்மை நீரின் திண்மையைவிட 1.4 மடங்கு அதிகமானது. பூமியின் கவர்ச்சி ஆற்றலைவிட கதிரவனுக்கு 23 மடங்கு அதிகமான கவர்ச்சி ஆற்றல் உண்டு. பூமியின் மீது 150 பவுண்டு எடை புள்ள மனிதன் சூரியன் மேல் 4,800 பவுண்டு (2 .ன்) எடை
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/57
Appearance