%3 அறிவியல் விருந்து பாகும்." இக்கோளும் வானத்தில் நல்ல ஒளியுடனும் வனப் புடனும் தோன்றுகிறது, நமது ஊனக் கண்களாலும் இதனைக் காணலாம். ஒளியில் இது சுக்கிரனையும் குருவை யும் விட சற்று மங்கலானது. சனிக் கோள் சூரியனுக்குச் சராசரி 88 கோடியே 50 இலட்சம் கல் தொலைவிலுள்ளது. கதிரவனுக்குச் சேய்மை யிலுள்ளபோது, 93 கோடியே 10 இலட்சம் கைல் தொலை விலும், அண்மையிலுள்ளபோது 84 கோடியே 40 இலட்சம் மைல் தொலைவிலும் உள்ளது. எவ்வளவு தோலைவிலிருப்பினும் இக்கோள் தமது ஊனக் கண் களுக்குப் புலனாகின்றது. இக்கோளின் குறுக்களவு 73 ஆயிரம் மைல். அதன் மேற்பரப்பு பூமியின் மேற்பரப்புக்கு 81 மடங்கு விரிவாயுள்ளது. இதன் பரிமாணம் பூமியின் பரி மாணத்தைவிட 734 மடங்கு பெரியது. இது கதிரவனை விநாடிக்கு ஆறு மைல் வேகத்தில் தான் சுற்றுகின்றது. இங்ஙனம் இது சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 ஆண்டுகள் ஆகின்றன. இதன் தற்சுழற்சியின் கால அளவு 104 மணி நேரமாகும். சூரியனிலிருந்து தமக்குக் கிடைக்கும் வெப்பத்தில் நூறில் ஒரு பங்கே சனிக்குக் கிடைக்கின்றது. இக் கோளை பூமியுடன் ஒப்பிடுகையில் இரண்டற்கும் இடையே ஆரியதோர் எண் ஒற்றுமை தற்செயலாக அமைந்து கிடக்கின்றது. சூரியனுக்கும் சனிக்கும் உள்ள துரம், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைவிட சற்றே தக்குறைய ஒன்பதரை (9.5) மடங்கு அதிகமாகும்; இங்ங்ணமே இதன் குறுக்களவும் பூமியின் குறுக்களவினை விட சற்றேறக்குறைய ஒன்பதரை (9.5) மடங்கு அதிகமாக உள்ளது. இதன் எடையோ பூமியின் எடையைவிட 95 மடங்கு அதிகமாகும். இதன் அளவு பூமியின் அளவைவி. భీ2, சனி - Satura تیمهای جسمی
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/86
Appearance