பக்கம்:அறிவியல் விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் 103 நிலையை அடையாததைக் கண்டு அக் கோளாறு யுரேனளின் இயக்கத்திலிருக்க வேண்டுமென்றும், இஃது அதன் அருகிலுள்ள மற்றொரு கோளின் விளைவாக இருக்கலாம் என்றும் ஊகித்தனர். இங்ங்ணம் யுரேனளின் இயக்கத்தைப் பாதிக்கும் கோள் யுரேனவிலிருந்து எவ் வளவு தொலைவிலிருக்கவேண்டுமென்றும், இதன் பருமன், எடை முதலியவை எத்தகையனவாக இருக்க வேண்டும் என்றும் நியூட்டனின் பொருட்கவர்ச்சி ஆற்றல் விதியினைக் கொண்டு அறுதியிட்டனர். இந்த விவரங்களைக் கொண்டு தொலைநோக்கிமூலம் வானத்தில் அப்பகுதியை ஆய்ந்ததில் இப் புதுக்கோளின் இருப்பு தெரியவந்தது. இக்கோளை ப்பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்து கொள்ள இயலவில்லை. சூரியனுக்கும் இக்கோளுக்கும் உள்ள தொலைவு 279 கோடியே 35 இலட்சம் மைல். இது சூரியனிலிருந்து பூமியைவிட முப்பது பங்கு தொலை வுள்ளது. இதன் குறுக்களவு 31 ஆயிரம் மைல். இது விநாடிக்கு மூன்றேகால் மைல் வீதம் தன் மண்டலத்தில் சூரியனைச் சுற்றுகின்றது; ஒருதடவை சுற்றுவதற்கு 165 ஆண்டுகள் ஆகின்றன. இக்கோளிலிருந்துகொண்டு கதிரவனைக் காணின் பூமியில் வெள்ளி எவ்வளவு சிறி தாகத் தோன்றுகின்றதோ அவ்வளவு சிறிதாகவே தோன் தும். நெப்டி யூனுக்கு ஒரு துணைக்கோள் உண்டு. இத் துணைக்கோளின் குறுக்களவு மூவாயிரம் மைலுக்கு மேலிருக்கலாம் என்று புலனாகின்றது. இஃது அதிவேக மாய்க் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றது. இது 15 மணி 40 நிமிட நேரத்தில் தன்னை யும் ஒருதடவை சுற்றிக்கொண்டுள்ளது. யுரேனஸ், நெப்டியூன் என்ற ஒளியற்ற கோள்களை முறையே இராகு, கேது என்ற நிழற்கோள்களாகக்