பக்கம்:அறிவியல் விருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$334 அறிவியல் விருந்து கருதலாம். கதிரவனுக்கு முடிசூட்டியபொழுதே மலரவனார் வருணனுக்கும், நிருதிக்கும், குபேரனுக்கும் முடிசூட்டிய தாக இலிங்க புராணம் கூறுகின்றமையின் இக் கோள்களுக்கு இப்பெயர் சூட்டினமை புராணத்திற்கு முரணாகாது. 10. புளுட்டே (குபேரன்) நெப்டி யூன் கண்டறிந்த எண்பத்து நான்கு ஆண்டு களில் (1930-இல்) நியூட்டனின் பொருட்கவர்ச்சி ஆற் றல் விதியின் துணைகொண்டு டாக்டர் லவல்" என்பார் புளூட்டோ என்ற கோளைக் கண்டறிந்தார். இக் கோளி னைப்பற்றிய இயல்புகள் ஒன்றேனும் இன்னும் விளக்கம் எய்தவில்லை. இது கதிரவனுக்கு 365 கோடியே 50 இலட்சம் மைல் தொலைவிலுள்ளது. அஃதாவது சூரியனி லிருந்து பூமியின் தொலைவில் நாற்பது மடங்கு தொலை விலுள்ளது. இஃது 247.7 ஆண்டிற்கொருமுறை கதிரவனைச் சுற்றுவருகின்றது. பூமியின் எடையில் பத்தில் எட்டு பங்குதான் இதன் எடை இருக்கலாம் என்று தெரிகின்றது. இதன் குறுக்களவு திண்மை, பருமன், எடை முதலியவை பூமியினுடையவற்றைவிட குறைந்தே உள்ளன. வான நூற் புலவர்கள் இத் துணைக் கணக்கிட்டாலும், தொலை நோக்கியால் இதனைக் கண்டவர் எவரும் இலர்! இது பழுப்புநிறமுடையது. இதற்குக் காற்று மண்டலம் இல்லை. ஒரே குளிர்! எங்கும் பாழ்! இன்னும் புதுக் கோள்கள் கண்டறியப் பெறலாம். கதிரவனிலிருந்து பூமிக்குள்ள தொலைவின் முந்நூறு மடங்கு தொலைவு வரை அதன் கவர்ச்சி ஆற்றல் பரவி 57. 58-ஆம் அத். 7; 56-ஆம் அத். 3,4. 58, t-mêt-à way&-Dr Lowell.