ஞாயிற்றுக் குடும்பம் 藍鬍擊 வால்மீன் மிகப் பெரியது; இஃது ஒன்றரை ஆண்டுக் காலம் கண்ணுக்குப் புலனாகி விளங்கியது. வால் மீன்கள் சூரியனைக் கிழக்கு மேற்காகச் சுற்றுகின்றன. 2. எரிமீன்கள் வால்மீன்களைப்போல் வானத்தில் தோன்றும் மதி றொருவகைப் பொருள்கள் எரிமீன்களாகும். நாள் தோறும் பூமியின் மீது இலட்சக் கணக்கான எரிமீன்கள் விழுகின்றன. பெரும்பாலும் அவை வாயு மண்டலத்தி லேயே எரித்துபோய்விடுகின்றன. கோள்களைப்போலவே சில சிறுசிறு உருண்டைகளும், துணுக்குகளும் கோடிக் கணக்கில் பெருங் கூட்டங்களாகக் கதிரவனைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் இவற்றுள் சில விடுதலை பெற்று பூமியின் மீது பாய்கின்றன. சில சமயங்களில் பூமி இவற்றினிடையே பாய்ந்து செல்லுகின்றது. இவ்விரு சமயங்களிலும் இவை பூமியின் கவர்ச்சி ஆற்றவில் சிக்குண்டு, அதன் காற்று மண்டலத்தில் புகுந்து, உராய் வுற்று, நெருப்பாக மாறி, மின்னலைப் போன்று ஒரு விநாடி காலம் மின்னி, இறுதியில் மறைந்து போகின்றன. இவை உமிழும் கனலின் வெப்பம் 7000°C இருக்கக்கூடும் என்றும், இவை காட்டும் சோதியின் நீளம் 12 மைல் முதல் 15 மைல் வரை இருக்கலாம் என்றும் வானது.ாற் புலவர்கள் கருதுகின்றனர். நிலமட்டத்திலிருந்து எண்பது மைல் உயரத்திலும் அதற்கு மேலுள்ள காற்று மண்டலப் பகுதி யிலுமே இவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. காற்று மண்டலத்தில் எரிந்து சாம்பலாகாத சில எரிமீன்கள் பூமியின்மீது விழுகின்றன. அப்படி விழுந்த துண்டுகளைப் பொதுக்கி அரும்பொருட்காட்சி யகத்தில் வைத் துள்ளனர். இவற்றை எரிகற்கள்' என்று வழங்குவர். 65. arists fòssir-Meteorites, ஆ-7
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/97
Appearance