Hiß அறிவியல் விருந்து எல்லா எரிகற்களிலும் ஒரே வகையான மூலிப் பொருள் கள் இலந்திருப்பதில்லை. சிலவற்றில் உலோகமே காணப் பெறுவதில்லை. மற்றும் சிலவற்றில் சிறுசிறு வயிரக் கற்களும், இன்னும் பல வகையான இரத்தினங்களும், வெறுங் கண்ணாடித் துண்டுகளும் காணப்பெறுகின்றன. இதுவரை பூமியின் பல்வேறு பகுதிகளில் வீழ்ந்த கற்களில் சுமாரி 1500 கற்கள் வரை சேகரித்து வைக்கப் பெற்றுகிளன. இவற்றுள் சில கூருருளை வடிவமானவை. சில ஒழுங்கற்ற உருவமுடையவை. இவற்றுள் சில பூமியின் அடியில் ஆறு மீட்டர் ஆழம்வரை தோண்டி எடுக்கப்பெற்றவை. இவை வீழும் இடங்களினருகிலுள்ள பரம்செடிகள் தீப்பற்றி எரிந்துவிடுகின்றன. இதுவரை இவை மக்கள் வாழும் பகுதிகளில் விழவில்லை. எரிகற்கள், பூமி, சூரியன், விண்மீன்கள் இவற்றில் ஒரேவகையான மூலப்பொருள்களே காணப்பெறுகின் றன. ஆகவே, இயற்கைத் தோற்றமாகிய அகில முழு வதும் ஒரே இயல்பினையுடைய ஆற்றலினின்றும் தோன்றி வளர்த்து வந்துகொண்டுள்ளது என்பதை நாம் அறி கின்றோம். மேற்கூறியவற்றை தோக்கும்பொழுது நாம் வதியும் இப் பூமண்டலமும், இதனோடு சார்ந்திருக்கும் ஏனைய கோள்களும், இவற்றின் தலைவனாம் கதிரவனும் இப் பெரிய அண்டப் படைப்பில் ஒரு சிறு அணுவென்றே சொல்லவேண்டும். மணிவாசகரின் கருத்தும் இதுவே யன்றோ? நக்கபிரான் அருளால்-இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்கள்.வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்!
பக்கம்:அறிவியல் விருந்து.pdf/98
Appearance