பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ. பெ. விசுவநாதம்

9



மாணவன்: யாவும் கற்றுவிட்டேன்; இனி உங்கள் உதவியின்றி நானே ஜாதகம் பார்த்துச் சொல்லுவேன்.

ஜோசியர்: முக்கியமான ஒன்றை இன்னும் நான் சொல்லிக் கொடுக்கவில்லையே!

மாணவன்: அது என்ன ஐயா?

ஜோசியர்: “எவன் ஜாதகத்தைத் துரக்கிக்கொண்டு வருகிறானோ, அவனுக்குக் கெட்ட காலம் நேர்ந்திருக்கிறது என்பதை முதலில் நினைத்துக் கொள்; பிறகு ஜோசியம் சொல்” என்பதே.

நகைச்சுவை

சிரிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது என்பது மருத்துவ அறிஞர்களின் கருத்து. மக்களைச் சிரிக்கவைக்க நகைச்சுவை ஒரு சிறந்த கருவி. இக் கருவியை விழிப்பாகக் கையாள வேண்டும். இன்றேல், இது தீமையே தரும்.

நகைச்சுவை வேறு, நையாண்டி வேறு, நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு மயிரிழை தவறினாலும் நையாண் டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும்.

ஒருவன் கூறியது நகைச்சுவையா? நையாண்டியா என்பதை அறிய விரும்பினால், அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா? என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உணர்ச்சி

அம்பு இன்றி வேட்டைக்குச் சென்ற வேடர்களையும் கத்தியின்றிப் போராடிய வீரர்களையும் எவரும் எங்கும் பார்த்திருக்கலாம். ஆனால் உணர்ச்சியின்றி வெற்றி பெற்ற மக்களை எங்கும் எவரும் காண இயலாது.

புலவர் பெருமக்களுக்கு

‘கற்று, உணர்ந்து, அடங்கு’ என்பதையே தமிழ்ப் புலவர்கள் படித்தார்கள்; அதையே தாங்களும் கையாண்டார்கள்;