பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி.ஆ. பெ. விசுவநாதம்
25
 


மகிழ்ச்சி

வெற்றியும் தோல்வியும் பாராமல், புகழும் வசையும் எண்ணாமல், கடமையைச் செய்து மகிழ்வதுதான் இவ்வுலகின் உண்மையான மகிழ்ச்சியாகும்.

விதி என்பது ஒன்று உண்டு. அது நன்றாய் விளையாடும் ஒரு விளையாட்டுப் பிள்ளை. முயற்சி என்ற வலிமை பெற்றுள்ள மனிதன், ஆயுதம் எடுத்து அதனுடன் சண்டைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கையையே ஆயுதமாக உப யோகிக்க வேண்டிய தேவையும் இல்லை. முயற்சியுடையாரின் ஆண்மை நிறைந்த ஏளனச் சிரிப்பு ஒன்றே அதை வெல்வதற்குப் போதுமானது.


நல்ல வழி

உண்மையை மறவாதே! நேர்மையில் தவறாதே! ஒழுக்கத்தை ஒருபோதும் கைவிடாதே! நல்ல வாழ்வு வாழ இதைவிட நல்ல வழியில்லை!


எப்படி மக்கள்?

ஒருவன் பாதையில் சென்று கொண்டிருந்தான். அவன் துணியில் ஒரு ரூபாயை முடிந்திருந்தான். அவனை அடுத்துச் சென்ற ஒருவன் அதை அவிழ்த்தான் ரூபாய் மண்ணில் விழுந்தது. அவிழ்த்தவன் அதைக் கையால் எடுக்க முயன்றான். அதைப் பார்த்த வேறொருவன், அவன் கைம்மேல் தன்கையை வைத்து அழுத்தி, “ரூபாய் என்னுடையது” என்று வாதாடினான். எட்டியிருந்த ஒருவன் வந்து இருவருக்கும் இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு, ரூபாயை எடுத்துக்கொண்டு போனான். எல்லாவற்றையும் பார்த்திருந்த ஒருவன் ரூபாயைப் பறி கொடுத்த ஆளைக் கூப்பிட்டு உன் ரூபாய் எங்கே? எனக் கேட்டான். “ஆம் ஐயா! கீழே விழுந்து விட்டது கொடுத்து விடுங்கள்” என அவனையே கேட்டான் அவன் என்ன சொல்லியும் நம்பவில்லை. எப்படி மக்கள்? .