பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36
அறிவுக்கு உணவு
 


கூட்டுக் கையெழுத்து

எவனொருவன் பிறருடைய கடனுக்காகக் கூட்டுக் கையெழுத்துப் போடத் தொடங்குகிறானோ, அவன் அன்றையிலிருந்தே தன்னையும் அழித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகிறான். கூட்டுக்கையெழுத்துப் போட்டுப் பிறருக்கு உதவி செய்ய விரும்புவதைவிட, தன் கையில் இருக்கும் பணத்தை அவருக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவது எவ்வளவோ மேலானது.


அரிதும் எளிதும்

பிறர் எண்ணங்களை அறிந்து, அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. ஆனால், உன் எண்ணங்களை அறிந்து, நீ யார் என்பதைக் கண்டுபிடிப்பதோ, மிகவும் எளிது.


நல்லது

ஒரு கழகத்திற்குப் பொருளைத் தேடிக்கொடுக்க இயலாதவர் கள், இருப்பதையேனும் அழிக்காதிருப்பது நல்லது. ஒரு நிலையத் திற்குச் சிறப்பைத் தேடித்தர இயலாதவர்கள். பழிப்பையேனும் தேடித் தராதிருப்பது நல்லது.


இரண்டை ஒன்றாக்கு

நீயும் உன் மனைவியும் சேர்ந்து நான்கு கண்களால் உலகைப் பார்த்தும், நான்கு காதுகளால் செய்திகளைக் கேட்டும் இல்லறத்தை நடத்துங்கள்; சிறப்படைவீர்கள். ஆனால், காதுகளையும் கண்களையும் பெருக்கிக்கொள்வதனால் மட்டும் வெற்றி பெற்றுவிட இயலாது. வாய்கள் இரண்டையும் ஒன்றாகக் குறைத்துக் கொள்வதிலேதான் வெற்றி அடங்கியிருக்கிறது.


செல்வங்கள்

மண்ணிலே மறைந்து கிடக்கின்ற பொன், மலையிலே சிதறிக் கிடக்கின்ற மணி, கடலிலே ஆழ்ந்து கிடக்கின்ற முத்து ஆகிய இவை மட்டுமல்ல செல்வங்கள். இலக்கியத்திலே புதைந்து கிடக்கும் கருத்துக்களும் செல்வங்களேயாம்.