பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
அறிவுக்கு உணவு
 


வாழைப்பழம் என்பதைத் தெற்கே உள்ளசிலர் வாளப்பழம்' என்கின்றனர். கிழக்கே உள்ள சிலர் மார்கழித்திருவிழா என்பதை மார்கசி திருவிசா என்கின்றனர். தாழ்த்தப்பட்டோருட் சிலர், "இஸ்துகினு” போயிகினு என்று சொல்கின்றனர். உயர்த்தப்பட்டோருட் சிலர், அத்திம்பேர்’, ‘அம்மாமி என்கின்றனர். இவற்றுள் யார் பேசுவது போல எழுதுவது? இப்படி எழுதுகிற இலக்கியம் எப்படி நல்லதாக இருக்கும்?

கே: பழங்காலத்தில் மதம் இருந்ததா?

வி: பழந்தமிழகத்தில் மதம் இருந்ததாகத் தெரியவில்லை.அடுத்த காலத்தில் சமயம் இருந்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் முருகன் வழிபாடு தோன்றியிருக்கிறது. இவற்றிற்குச் சங்க நூல்களே சான்றாகும்.

கே: தமிழர்களிடையே ஜாதி உண்டா?

வி: இல்லை! ஜாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அன்று சங்க இலக்கியம் எதிலும் இச்சொல் இல்லை! ஆனால், குலம் என்ற ஒருசொல் இருக்கிறது. ஜாதி வேறு, குலம் வேறு. ஜாதி பிறப்பைக் குறிக்கும். குலம் ஒழுக்கத்தைக் குறிப்பிடுவதைக் காணலாம்.

கே: வண்ணாத்திப் பூச்சி என்னும் பெயர் எப்படி வந்தது?

வி: வண்ணாத்திப் பூச்சி என்பது பெயரன்று. அதன் உண்மைப் பெயர் வண்ணத்துப் பூச்சி. பல வண்ணமுள்ள பூச்சி, ஆதலின், அப்பெயர் அதற்கு வந்தது. வண்ணான், வண்ணாத்தி என்பதும் தவறு. வண்ணம் செய்கிறவன் வண்ணன், வண்ணஞ் செய்கிறவள் வண்ணத்தி என்பனவே சரியான சொற்களாகும்.

கே: வேட்டி வடசொல்லா, தமிழ்ச் சொல்லா?

வி: வேட்டி, நல்ல தமிழ்ச் சொல் ஆடைகளை நீளமாக நெய்து ஒவ்வொன்றாக அறுத்தெடுப்பார்கள். அறுக்கப்பட்டது அறுவை. துணிக்கப்பட்டது துணி, துண்டிக்கப்பட்டது துண்டு. வெட்டப்பட்டது வெட்டி. காலப்போக்கில் வெட்டி வேட்டி என்றாயிற்று. வேஷ்டியிலிருந்துதானே வேட்டி வந்தது என்று கூறுகிறவர்கள். முட்டி முஷ்டியிலிருந்து வந்ததென்றும் சட்டி