பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝğ அறிவுக்கு விருந்து நல்லது செய்தல் ஆற்றி சாயினும் அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான் எல்லாரும் உவப்ப தன் றியும் நல்லாற்றுப் படுஉ தெறியுமா சதுவே. ' என்ற பாடல் மக்களாகப் பிறந்தார் அனைவருக்கும் சிறந்ததோர் அறவுரையாக மிளிர்கின்றது. மேற் கூறிய பாடற்பகுதிகள் இவ்வுலகம் உள்ளளவும் மன் பதைக்கு அறிவு கொளுத்தி நிற்கும் பொய்யா மொழி களாகப் பொலிவுறும். "யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்” வாழ்க்கை நிலையி லிருந்து கவிதையை நோக்கினுல் கவிஞன் கூறும் உண்மையை உணர இயலாது. கவிஞன் பேசும் உண்மைகள் யாவும் குறிக்கோள் நிலையைப் பற்றியவை; இருப்பதைப்பற்றிப் பேசாமல் இருக்கவேண்டியவற்றைப் பேசுபவை. உலக வாழ்வைப் பேசினலும் அவை அதில் நாம் காணுத புதுமைகளையே எடுத்துரைக்கின்றன. இக் காரணம்பற்றியே கோலரிட்ஜ்என்பாரும், 'ஒப்பற்றமெய்ப் பொரு ளறிஞனுக இல்லாத ஒருவன் என்றுமே சிறந்த கவிஞனுக இருந்ததில்லை" என்றும், எமர்சன் என்ற பேரறிஞரும், "சிறந்த கவிஞர் எனப்படுவோர் அவர் பிறர் மனத்தைத் துர ண் ட க் கூ டி ய மனநிலையைக் கொண்டே முடிவு செய்யப்பெறுவர்” என்றும் கூறிப் போந்தனர். எனவே, கவிதை உயர்ந்த பீடத்தினின்றே பேசவேண்டும் என்ருகின்றது கவிஞன் காட்டும் வாழ்க்கையும் குறிக்கோள் தன் மையுடையது. வாழ்க்கை எவ்விதம் அமைந்தால் நலம் என்று கவிஞன் கருதுகின்ருனே, அங்ங்னமே அக் குறிக்கோளையும் ஆக்குகின்ருன்; அதற்கேற்றவாறு 35