பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் £25 மணிமேகலை மணிமேகலை ஐம்பெருங் காப்பியங் களில் ஒன்று. சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை. வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாம். இவை பெளத்தர், சமணர் என்னும் இரு சமயத்தாராலும் இயற்றப்பெற்றவை. இவற்றுள் மணிமேகலை, குண்டலகேசி ஆகிய இரண்டும் பெளத்த நூல்கள். மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்ருகவைத்து எண்ணப்பட்டபோதிலும், با نگاه சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை, மணிமேகலை மேல் உணைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாகும். மணி மேகலையை இயற்றியவர் சீத்தலைத் சாத்தனர்; இவர் மது ைர யி லி ரு ந் த ஒரு கூலவாணிகர். இவர் செங்குட்டுவன் அவைக்களத்தில் புலவராக இருந் திருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். சேரன் செங்குட்டுவன் மலைவளங் காணச்சென்றிருந்த பொழுது மலைவாணர் மூலமாய்க் கண்ணகியின் செயலைக் கேட்டுத் திகைத்து நிற்க, இவர் அவள் வாலாற்றைத் தொடக்க முதல் இறுதிவரை விரிவாக எ டு த் து ைர த் தமையிலிருந்து இஃது உறுதிப்படுகின்றது." மணிமேகலை என்னும் காவியம் முழுவதும் ஆசிரியப் பாவினுல் அமைந்தது. இது கதை பொதி பாட்டு' என வழங்கும் பதிகத்தைத் தவிர விழாவறை காதை' முதலாகப் பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை" இறுதியாக முப்பது கதைகளையுடையது. இதற்கு ‘மணிமேகலைத் துறவு என்ற மற்ருெரு பெயரும் உண்டு. 2. வஞ்சிக் காண்டய்: நூற்கட்டுரை: வரி 17-18) 3. வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை:வரி (69-92)