பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அறிவுக்கு விருந்து பட்டிருக்கின்றது. அவ் விட்டத்தில் பொற்சங்கிலிகளை மாட்டி அச் சங்கிலிகளில் பச்சைக் கல்லால் செய்யப்பட்ட ஊ ச ல் ப் ல ைக தொங்கவிடப்பட்டிருக்கின்றது. அத்தகைய ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு பெருமாள் ஊஞ்சல் ஆடுகின் ருர், ஊஞ்சலின்மேல் அமைக்கப்பெற்றிருக்கும் விமானம் நீலப்பட்டால் வேயப்பட்டு அதில் முத்துக்கள் பதிக்கப் பெற்றிருக்கின்றன. அது விண்மீன்கள் ஒளிக்கும் நீலவசனம்போல் காட்சியளிக்கின்றது. பெருமாளுக்கு மேல் விளங்கும் வெண்கொற்றக்குடையோ ஆகாயத்தில் தோன்றும் முழு மதியம்போல் காட்சியளிக்கின்றது, அவருக்கு இ ர ன் டு பக்கத்திலுமிருந்து வீசப்படும் வெண்சாமரங்கள் சந்திரனுடைய கிரணங்கள் போல் காணப்படுகின்றன. அந்தணர்களும், அரசர்களும், .ே த வ ர் க ளு ம் அவர்கள் துணைவியரும், தேவேந்திரனும், பிரம தேவனும், பரமசிவனும் பெருமாளே ச் சேவிப்பதற்காகச் சமயம் பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றனர். தக்க சமயம் வந்ததும், பெருமாளைக்கண்டு வணங்குகின்றனர். வந்திருந்தவர்கள் பெருமாளின் ஊஞ்சலைப் பிடித்து ஆட்டுகின்றனர். மலேமகளும் அசனும்ஒரு வடந்தொட் டாட்ட வாசவனும் சசியும்ஒரு வடந்தொட் டாட்டக் கலைமகளும் அயனும்ஒரு வடந்தொட் டாட்டக் கந்தனும்.வள் எளியும்கலந்தோர் வடந்தொட் டாட்ட |மலைகள்-பார்வதி, அரன்-சிவபிரான்; வடம்-சங்கிலி: சசி-இந்திராணி, வாசவன்-இந்திரன்; கலைமகள்-சரசுவதி: அயன்-பிரமன்; கந்தன்-முருகன்.j பெருமாள் ஊ ஞ் ச ல் ஆடுகின்ருர். கணவனும் மனைவியுமாக இருந்து கொண்டு ஒவ்வொரு இணையும்