பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அறிவுக்கு விருந்து நின்று எல்லாக் காலத்திற்கும் உரியதாகின்றது. மனிதனிடம் அமைந்துள்ள இச்சிறப்பியல்பே கலைத் துறையில் வளர்ந்து கற்பனைத் திறனுக அமைந்து விடுகின்றது. இத்தகைய கற்பனைத் திறனுல்தான் திருத்தக்க தேவர், இ ள ங் .ே க | வ டி க ள் போன்ற துறவியரும் காதலுக்குச் சிறந்த வடிவு தந்து பாடமுடி கின்றது. திருவள்ளுவர் போன்ற அறவாழ்வு வாழ்ந்த பெரியோர்களும் வரைவின் மகளிர், கூடாவொழுக்கம் போன்றவற்றையும் சிறந்த முறையில் பாடியுள்ளனர். அன்பு, நட்பு ஆகிய அனுபவங்களைக்கொண்டே அவர்கள் காதல் உணர்ச்சியையும் கற்பனை செய்து பாடியுள்ளனர். ஒருவன்-ஒருத்தி வாழ்க்கையின் அனு பவத்தைக் கொண்டே அதற்கு எதிர்மறையாகவுள்ளவற் றையும் பாடியுள்ளனர். உணர்ச்சியுடன் கண்டதொரு நிகழ்ச்சியை உள்ளத் தில் அவ்வனுபவம் முழுதும் தோன்றுமாறு திரும்பக் கொணர்ந்து பாடுதல் ஒருவகை; கற்பனையாகவே ஒன்றைப் படைத்து அதற்கியைந்த உணர்ச்சி முழு வதையும் பெற்று அதைத் தன் அனுபவமாக்கிக் கொண்டு அல் வனுபவம் வெளிப்படுமாறு பாடுதல் மற்ருெரு வகை. முன்னது கைக்கூடும் ஒருவருக்குப் பின்னதும் கைக் கூடும். மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி யெம்பிரான் மார்பினிற் குரவையாடி முழவுமுதிர் துடியினிற் சிறுபறை முழக்கியனல் மோலி நீர் பெய்தவித்து முளை மதியை நெளியாவின் வாய்மடுத் தினமானின் முதுபசிக் கறுகருத்தி