பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


செலவானது. ஐந்தாம் ஆண்டில், “இறந்துபோன கணவன் உயில் எழுதி வைத்திருப்பதால் இளம்மனைவி மீனாட்சி யம்மாளுக்கே வீடு சொந்தம்” எனத் தீர்ப்பாகி விட்டது.

சும்மா விடுவார்களா காமாட்சியம்மாளைச் சேர்ந்தவர்கள், “அவ்வீடு பரம்பரையாக வந்த வீடாதலால் நீலமேகம் பிள்ளைக்கு உயில் எழுதிவைக்க உரிமை யில்லை” என்று கூறி மேல் முறையீடு செய்தார்கள். வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றன. மேலும் இரண்டிரண்டு நஞ்சை நிலங்கள், கோர்ட்டு செலவிற்கும், வீட்டு செலவிற்கும், கூட்டாளிகளின் செலவிற்கும், இருவர்க்கும் செலவாயின.

இளம் மனைவி மீனாட்சியம்மாள் தன் சிறிய தாயாரை அனுப்பி, மூத்த மனைவி காமாட்சியம்மாளைப் பார்க்க விரும்புவதாக சொல்வி அனுப்பினாள். காமாட்சி யம்மாள் ஒடோடி வந்து தன் சக்களத்தியிடம் “என்னடி செய்தி” எனக் கேட்டாள். இளையவள் தன் கையிலிருந்த ஒரு நாளிதழைக் கொடுத்து, “அக்காள்! இதைப் படித்துப் சார்!” என்றாள்.

அந்த இதழில் வெளிவந்திருந்த செய்தி இதுதான்.

“இலண்டனில் ஒருவன் வீதியில் நடந்து கொண்டிருந்தான். அவன் கைக்குட்டைதவறிப் போப் கீழே விழந்து விட்டது. பின்னால் வந்தவன் அதை எடுத்து வைத்துக் கொண்டான். முன்னால் வந்த ஒருவன், “அது தன் கைக்குட்டை கொடு” எனக் கேட்டான். பின்னால் வந்தவனோ “கீழே கிடந்த கைக் குட்டையை நான்தான் கண்டெடுத்தேன். எனக்குத்தான் சொந்தம்” எனக் கூறினான். இருவரும் நீதிமன்றம் சென்று வழக்காடினார்கள்.

அ.க.—10