பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


“நல்ல பணியை உடனே செய்யுங்கள்"—என்று கூறி அனுப்பினார்.

மவுல்விக்கு—‘என்னடா இது?— என்று தலை சுற்றியது.

10 பருப்பு சிந்தினதற்கு 10 குத்து குத்தினான்.

10 சொட்டு எண்ணெய்க்கு 10 சொட்டு இரத்தம் எடுக்க சவுக்கால் அடித்தான்.

—இப்படிப்பட்ட கருமி—நாம் ரூ. 50,000 கேட்டால், ஒரு லட்சம் எடுத்துக் கொடுக்கின்றானே—‘இது என்ன விந்தை?’

என்று வியந்து எண்ணிக் கலக்கமுற்று, நபி பெருமான் அவர்களிடம் சென்று,

‘கருமியின் நடத்தை புரியவில்லையே, காரண்ம் என்ன?’—என்று மவுல்வி கேட்டார்.

பெருமானார் :

‘நீ அவனைக் கருமி என்று நினைத்தது தவறு—அவன் எந்தப் பொருளையும் பாழாக்காமலும் வீணடிக்காமலும் சிக்கனமாக இருந்து பொருள்களைச் சேமித்து வைத்ததனால்தான் செல்வம் சேர்க்க முடிந்தது. இப்படி நல்ல காரியத்துக்கு அள்ளி வழங்கவும் முடிந்தது—என்று விளக்கமாக எடுத்து விளம்பினார்.

நபியின் விளக்கம் கேட்ட பின்பு—சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு—என்பது மவுல்விக்குப் புரிந்தது.

நமக்கு புரிந்ததா!

எட்டு மைல் தூரம் உள்ள ஊருக்கு 20 ரூபா தந்து (டாக்சி) வாடகை வண்டி ஏறிப்போவது ‘இடம்பம்’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/17&oldid=962637" இலிருந்து மீள்விக்கப்பட்டது