பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

எல்லாச் சமய வழிபாடுகளிலும், சில தியாகப் பொருள்களைக் கையாண்டு வருகிறார்கள்.

முஸ்லீம் சமுதாயத்தில், ஊதுபத்தி கொளுத்தி வைத்து ‘பாத்தியா’ எனும் இறைவழிபாடு நடக்கும். பாத்தியா முடிந்ததும் இதற்குப் பேருதவி செய்த ஊதுபத்தி அங்கே இருக்காது. எரிந்து சாம்பலாகிக் கிடக்கும்.

கிறித்தவ சமுதாயத்தில், ‘மெழுகுவர்த்தி’ கொளுத்தி வைத்து இறைவழிபாடு நடக்கும். செபம் முடிந்ததும் அதற்குத் துணையாக இருந்த மெழுகுவர்த்தியை அங்கே காணமுடியாது: தன்னையே அது அழித்துக்கொள்ளும்.

இந்துக்களின் கோவில்களிலே, சூடம் ஒரு கட்டிகொளுத்திவைத்து இறைவழிபாடு நடைபெறுகிறது. வழிபாடு முடிந்ததும், அதற்குப் பெருந்துணை செய்த சூடத்தைக் காணமுடியாது. அது தன்னையே அடியோடு அழித்துக்கொள்ளும்.

இவையனைத்தையும் பார்க்குபோது — மக்கட் சமுதாயத்துக்கு — தியாக வாழ்க்கை இன்றியமையாதது என்பதை அறிவறுத்தவே—எல்லாச் சமயச் சான்றோர்களும் இத் துணைப் பொருட்களைக் கையாண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

மழை

மழை நீரைப் பற்றிச் சிந்திப்போம்.

மழை உணவு தானியங்களையெல்லாம் விளைய வைத்துக் கொடுத்து, நீ அதிகமாக உணவு உட்கொள்ள அதற்குத் துணையாகக் காய்கறிகளையும் விளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/38&oldid=962659" இலிருந்து மீள்விக்கப்பட்டது