பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அறிவுக்



544.மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா.

போப்

545.நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே; ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா.

ஷேக்ஸ்பியர்

546.மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களே யாகும். சர்க்காரிடம் பொருளில்லை யெனில் நாணயங்கள் செலாவணியாகா; அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா.

கோல்ட்டன்

547.மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை,

ரெய்னால்ட்ஸ்

548.நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமே யாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர்.

ஸிஸரோ

549.கருத்து பழையதாயு மிருக்கலாம். பலர் கூறியதாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும்.

லவெல்