உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

101



550.நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே.

ஹீன்

551.சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர்.

ஹோம்ஸ்

552.வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன.

பிஷப் ஆண்ட்ரூஸ்


33. சம்பாஷணை

553.மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான இன்பங்களில் நல்ல சம்பாஷணையும் ஒன்று. இன்பகரமாய்க் கழிந்த மாலைநேரத்தை வர்ணிக்கப் புகுந்த ஜாண்ஸன் "இன்று நன்கு சம்பாஷித்தோம்" என்று கூறி முடித்தார்.

ஆவ்பரி

554.பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர்.

செஸ்டர்ட்டன்