உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அறிவுக்


பர்க்

80. நல்ல சேவை செய்வதற்கு உரிய ஆற்றலைக் கெட்ட மனிதனிடம் ஒருநாளும் காண முடியாது.

பர்க்

81. வழ்வாகிய வஸ்திரத்தில் எப்பொழுதும் இருவகை நூல் இருக்கும். நன்மை தீமையே அவை.

ஷேக்ஸ்பியர்

82. அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர்.

லாபுரூயர்

83. கயவர் முட்டாள்களின் நாட்டில் பட்டினியாய் இருப்பதில்லை.

சர்ச்சில்4. உண்மை


84. உண்மையே ஞானத்தின் உறைவிடம்.

பழமொழி

85. உண்மை உரைத்துச் சாத்தானை நாணமடையச் செய்க.

ராபிலே