பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

23


86. கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே,

-போப்

87. உயர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே.

-ஹீன்

88. உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை, அன்பினாலும் காண்கிறோம்.

-பாஸ்கல்

89. உலோபியைப் போல், உள்ளம் நிறைந்த உண்மையும் ஒலைக் குடிசையிலேயே வாழ்கின்றது.

-ஷேக்ஸ்பியர்

90. உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம்!-அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது.

-ட்ரைடன்

91. உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன். உண்மை அறிவதொன்றே என் விருப்பம்.

-லாக்ரடீஸ்

92. கடவுள் வலது கையில் முழு உண்மையையும், இடது கையில் உண்மையைத் தேடுவதில் அழியா ஆசையையும் வைத்துக்கொண்டு, எது வேண்டும் என்று