பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

73


ஆர். எல். ஸ்டீவன்ஸன்

எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஸதே

388. பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.

ஆர்.எல். ஸ்டீவன்ஸன்

389.செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.

ரொமெய்ன் ரோலண்டு

390.உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.

எபிக்டெட்டஸ்

391.செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.

ஆவ்பரி

392.கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.

டெரன்ஸ்

5