உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

83



443.பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும்.

கதே

444.யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.

எபிக்டெட்டஸ்

445.அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் "கோழை" என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.

பெடிட்ஸென்

446.ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.

டெனிஸன்

447.குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும்.

பால் ரிச்சர்ட்

448.உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.

பப்ளியஸ் ஸைரஸ்

449.உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.

ஆவ்பரி