பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அறிவுக்



450.என்னைப்பற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.

பால் ரிச்சர்ட்

451.கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது.

ஆங்கிலப் பழமொழி

442.ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.

வாட்ஸ்

453.குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.

லெய்ட்டன்

454.சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.

-கோல்ட்ஸ்மித்

455.குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.

லா புரூயர்

446.தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.

ஹாட்ஜஸன்