பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82

அறிவுநூல் திரட்.ே

முருகவேள் என்பார் இனியது எது? வெனப் பாடியது. இனியது கேட்பின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்; அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்; அதனினும் இனிது அறிவுள்ளோரைக் கனவிலும் கனவினும் காண்பது தான்ே!

அரியது இதுவெனப் பாடியது.

அரியது கேட்பின் வரிவடி வேலோய்! அரிதரிது மானிட ராத லரிது; மானிடாயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது; பேடு நீங்கிப் பிறந்த காலேயும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது; ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தான்மும் தவமும் தான்் செய்தல் அரிது; தான்மும் தவமும் தான்்செய்வா ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே.

2. காளமேகப்புலவர் பாடல். கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்்றன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும்-குத்தி உலேயிலிட ஊரடங்கும் ஒாகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும். 7