பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 119

எல்லாளி லாத குடி' என எதிர்மறை முகத்தான்் வலியுறுத்தார் நாயனுரும். இச் செய்யுளின் கருத்தால் மதலே போல் (தாண் போல்) தகப்பனைத் தாங்குதற் குரியவன் மகன் என்பது கருதியே மகனுக்கு மதலை என ஒர் பெயர் வந்த தென்பது அறியப்படும். இதுகொண்டு ஈற்றடியின் பாடத்தை எங்கனம் மாற்றில்ை பொருந்தும்?

2. திரிகடுகம்.

1. தாள் +ஆளன், தாளாளன் . முயற்சி யுடையவன். படா - ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். விருத்து இருக்க - வந்த விருக்கினர் உண்ணுமலிருக்க. விருந்து - புதுமை; ஆகு பெயர்; புதியாாய் வந்தார் மேல் நின்றது; அவர் பண்டு அறிவுண் மையிற் குறித்து வந்தாரும் அஃதின்மையிற் குறியாது வந்தாரு மென இருவகைப்படுவர். கோளாளன் - பிறர் அறிவித்த காரியங் களை மனதிற் கொள்ளுதலில் வல்லவன்.

2. பால் பற்றி - ஒரு புகத்தைப்பற்றி. தோல் வற்றிஉடம்பு வறுமையால் மெலிந்து. சாயினும் - கெட்டாலும். சான்று + ஆண்மை-எல்லாக் குணங்களும் நிறைந்து ஆளுந்தன்மை. அrஉயம் - தாய்மையின் மை விகுதி கெட்டது; அம், தன்மைப் பன்மை விகுதி. அளபெடை, இசை நிறைக்க வர்த்து.

8. வள்ளன்மை - கொடைக்குணம். புணர்வின்கண் . பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து. தக்கது - அவர்க்குச் செய்யத்தக்கது. பொத்து - பொத்து, இது வலித்தல் விகாரம். காழ்த்த வயிரம் பற்றிய, குறிப்புப் பெயரெச்சம்.

4. கட்பின் கொழுமுளை - சிநேகத்தின் செழித்த ஆரம்பம். செப்பம் - நடுவு நிலைமை. செப்பதெறி - செவ்வியவழி.

தன்னைப்பேனுங்கால் - தன்னைப் புகழுமிடத்து; திறன் வேறு கடறின் - இகழ்ந்தால், பொறையும் - பொறுத்தலும். காராண்மை - (கார்+ஆண்மை) மேகம் ஆளுதல் போல; கார் - பண்பாகுபெயர். ஊராண்மை - பிறரின் மேற்பட்டுச் செல்கின்ற ஆண்மை. செருக்கு - பெருமிதம்.