பக்கம்:அறுந்த தந்தி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி

'Tென்ன இருந்தாலும் நீங்கள் அவ்வளவு இடம் கொடுக்கக்கூடாது. எப்போது பார்த்தாலும் அவர்

கள் வீட்டிலேயே இருந்துகொண் டிருந்தால் குழந்தைக்கு

நல்ல பழக்கம் வரவேண்டாமா?” என்ருள் பார்வதி.

'அவர்கள் என்ன, கெட்ட பழக்கம் உடையவர்களா? அல்லது குழந்தையை அடிக்கிருர்களா? வைகிருர்களா? என்னவோ பாவம்! அதனிடத்தில் எத்தனையோ அபிமான மாக இருக்கிருர்கள். குழந்தையும் தெய்வமும் கொண் டாடும் இடத்தில் என்று வசனம் சொல்வதை நீ கேட்ட தில்லையா? அதற்கு அவர்களைக் கண்டால் பிடித்திருக் கிறது. அதனுல் அங்கே போய் விளையாடுகிறது’ என்ருர் பரமேசுவரையர். -

"ஆமாம்; அவர்களைக் கண்டால் பிடிக்கிறது, என்னே யும் உங்களையும் கண்டால் பிடிக்கிறதில்லையாக்கும்! ஒழுங் காயிருக்கிறது வார்த்தை குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் அவள்தானே?”

'இந்தா : சும்மா வாா வரா என்ற கத்தாதே. அவர் கள் உன் குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிடு கிருர்களா, என்ன ? வேளைக்கு வேளை நீ சோறுபோடத் தவறிலுைம் அவர்கள் தவறுவதில்லை. ஏன் இப்படி அகா வசியமாக அகுயைப்படுகிருய்?'

சொல்லுகிற வார்த்தை வாயில் இருக்கிறபோதே வள் ளென்று விழுகிறீர்களே! இந்தக் குழந்தையை இப்படியே விட்டுவிட்டால் நாளைக்குப் படிப்பு கிடிப்பு ஒன்றும் வேண் டாமா? தொட்டில் பழக்கம் என்னவோ மட்டும்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/116&oldid=535355" இலிருந்து மீள்விக்கப்பட்டது