பக்கம்:அறுந்த தந்தி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அறுந்த தந்தி

கவே பட்டன. அவர்கள் நடையிலும் உடையிலும் உணவிலும் எவ்வளவோ வேறுபாடுகளைக் கண்டான். அவனுே ஒரேமாதிரி இருக்தான்.

அவர்கள் அவனே எப்படிப் பார்த்தார்கள் ? அது தான் பின்னும் வேடிக்கை. அவனே வழிபட்டுவந்த காலம் மலையேறிப் போய்விட்டது. உடம்பெல்லாம் ரோமக்காடு மூடியிருந்த வாலில்லாக் குரங்கு ஒன்றைக் கண்காட்சியில் வைத்து வேடிக்கை பார்க்கிருர்களே, அந்தமாதிரி உலகத் தாருக்கு இப்போது அவன் விகோதப் பொருளாக ஆகி விட்டான். அவன் வேதனே தாங்காமல் என்னவோ சொன் ஞல், அந்த வார்த்தைகள் ஜனங்களுக்குப் புரியவில்லை. 'இந்த மிருகம் மனிதனைப்போலவே சத்தமிடுகிறதே! என்று பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் ஆச்சரியப்பட்டார் கள். கடைசியில் உலகம் அவனே ஒரு விசித்திர மிருக மாகவே வைத்துவிட்டது.

இப்பொழுது அவனுடைய கோயிலின் கர்ப்பக்கிருகம் ஒரு மரக்கூடு ஆகிவிட்டது. கண்காட்சி சாலே ஒன்று அங்கே எழுந்தது. ஆகா விவகாரங்களெல்லாம் அந்த இடத்தில் இருந்தப்டியே செய்துகொள்ளும் பரிதாப கிலேக்கு வந்து சேர்ந்தான். அவனே வேடிக்கை பார்க்க வருப வர்கள் பழத்தை விசி எறிவார்கள். குழந்தைகள் சிறு கல்லை விசி எறிவார்கள். அபூர்வப் பிராணியாகிய அவனே எவ்வ ளவோ பேர் படம் பிடித்தார்கள்; எவ்வளவோ ஆராய்ச்சிக் காார்கள் அக்தப் பிராணியைப்பற்றிய ஆராய்ச்சிகளை எழுதினர்கள். கர்ண பரம்பரையாக வந்த கதைகளையெல் லாம் தொகுத்துச் சிரஞ்சீவி மிருகத்தின் வரலாற்றை வெளியிட்டார்கள். இமாசலம் அகாதிகாலமாக இருக்கும் அதிசயம்; அதற்கு அடுத்த அதிசயம் இது என்று விளம் பாங்கள் பறந்தன. ஜனக் கூட்டம் வந்து கட்டணம் கட்டிக் கண்டு களித்துச் சென்றது.

சிரஞ்சீவியின் கித்தியத்துவம் வியாபாரப் பொரு ளாகிவிட்டது! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/147&oldid=535386" இலிருந்து மீள்விக்கப்பட்டது