பக்கம்:அறுந்த தந்தி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும்

I_ITட்டி கதை சொல்வதில் இணையற்றவள். குழந்தை களுக்குக் கதை சொல்வதில் மாத்திரம் அல்ல; பெரியவர்களுக்கும் கதை சொல்லி அவர்கள் உள்ளத்தை எங்கேயாவது அனுப்பிவிடுவாள். தலைமுறையாக வந்த கதைகளை அவள் தன்னுடைய கைச்சாக்கையும் சேர்த்து மெருகு கொடுத்துச் சொல்லும்போது யாராக இருந்தாலும் சரி, வாயில் ஈப்புகுந்தது தெரியாமல் கேட்டுக்கொண்டிருக் கத்தான் வேண்டும். அவன் எவ்வளவு முரட்டாத்மாவான லும் சரி, பாட்டிக்கு முன்னிலையில் மாப்பாச்சியைப் போல அடங்கி ஒடுங்கித் தன் கினேவையே இழந்து உட்கா வேண்டியதுதான்.

அவள் அப்பொழுதப்பொழுது தன்னுடைய உள் ளத்துக்குக் கற்பனேச் சிறகைப் பூட்டிப் பறக்கவிடுவாள். அவளிடமிருந்து வரும் கதைகளை அப்போது பார்க்க வேண்டும்! வானுலகத் தேவரையும், நாகலோகத்து மகளி ரையும் பிணைத்துவிடும். மலைக்குகையின் பூதத்தையும் ஆழ்கடலின் திமிங்கிலத்தையும் சண்டைக்கு இழுக்கும். அடர்த்த வனத்தின் மோகினிகளையும் பூலோக ராஜ குமார்களையும் இணைந்து குரவையாடச் செய்யும்.

அவளுடைய பூஜை புரஸ்காங்கள், நேமகிஷ்டை கள், சுசிருசிகள், ஆசாரசீலங்கள் ஆகியவைகளைப் பார்த் தால் பெண்ணுருவத்தில் எழுந்தருளியிருக்கும் பெருக்தவ முனிவர் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தக் காலத்து ஒளவைப் பாட்டி இப்படித்தான் இருந்திருப் பாளோ, என்னவோ!

பாட்டிக்குத் தெய்வபக்தி அதிகம்; வேதாந்தக் கொள் கைகளிலே பற்றுடையவள். உலகத்தில் அவள் பார்த்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/160&oldid=535399" இலிருந்து மீள்விக்கப்பட்டது