பக்கம்:அறுந்த தந்தி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 169,

கட்டை வண்டியின் பின்னே ராஜகுமாரியும் முன்னே ஏர்க்காலில் ராஜகுமாானும் உட்கார்ந்து போய்க்கொண்டே இருந்தார்கள். அதிகமாகப் பேசவில்லை. ஆலுைம் ராஜ கும்ாானுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. ராஜகுமா ரியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பார்த்து உள்ளம் பூரித்தான். அவள் தன்னச் சிவபக்தனென்று சொல்லி விட்டாள் அல்லவா? இனிமேல் உண்மையிலேயே சிவபக் தனுக இருக்கவேண்டும். இன்னும் அதிகமாகச் சிவநாம உச்சராணம் செய்யவேண்டும். திருநீற்றைப் பூசவேண் ம்ெ’ என்று எண்ணிக்கொண்டான்.

சிறிது தாம் போனவுடன் அங்கே ஒரு மைதானம் இருந்தது. மிகவும் பழங்காலத்தில் ஒரு கோயில் அங்கே இருந்திருக்கவேண்டும். இப்போது அது இடித்துபோய் உடைந்த விக்கிரகங்களும் கற்களுமாகக் கிடந்தன. வண்டி அக்திப் பக்கமாகப் போனபொழுது ராஜகுமாரன் கண்கள் அந்தக் கற்குவியலின் இடையே, ஆவுடையாரினின்றும் கழன்று தனியே கிடந்த சிவலிங்கம் ஒன்றைப் பார்த்தன. அவன் இப்போது உண்மையான சிவபக்தன் அல்லவா? அந்தப் பக்தியைத் தன்னுடன் வரும் மோகினிக்கு இன் லும் அதிகமாக வெளிப்படுத்தினுல் எவ்வளவு நன்ருக இருக்கும்!-இந்த எண்ணம் அவன் கெஞ்சத்தில் தோன் றியதுதான் தாமதம்; உடனே கீழே குதித்தான்; விாை வாகச் சென்று அந்த லிங்கத்தை எடுத்து வந்து தன் வண்டியில், ராஜகுமாரிக்கு அருகில் வைத்துவிட்டான். ராஜகுமாரி பார்த்தாள் ; 'ஹே சர்வாங்க சுந்தா, தங்களு டைய அதிசயமான யுக்தியை நான் மெச்சுகிறேன். தங்கள் திருவுள்ளத்தை நான் உணர்ந்துகொண்டேன். இதோ, தங்கள் கட்டளையின்படியே செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே ராஜகுமாரனுக்குச் சமீபமாக வண்டி யின் முன் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டாள். ராஜகும்ாரன் பிரம்மானந்த லாகிரியில் மூழ்கினவனேப் போல் ஆகிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/176&oldid=535415" இலிருந்து மீள்விக்கப்பட்டது