பக்கம்:அறுந்த தந்தி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அறுந்த தந்தி

'இன்னும் கொஞ்சந்தானே இருக்கப்போகிறது? முழுவதையும் கேட்டுவிட்டே நான் உன்னே அழைத்துப் போகிறேன்.”

'அப்படியானல் கேளப்பா, சொல்கிறேன்” என்று மறுபடியும் கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித் தாள் அந்தக் கிழவி.

来源 : *:::

எருமை மாட்டுவண்டி போய்க்கொண் டிருந்தது. ாாஜகுமாானுக்குப் பக்கத்தில் அவன்மேல் படாதபடி ராஜகுமாரி உட்கார்ந்திருந்தாள். அவனுடைய அங்க செளந்தரியத்தை அவள் கண்டு கண்டு களித்தாள்.

'ஹே புருஷோத்தம, தாங்கள் எக்தத் தேசத்தி லிருந்து வருகிறீர்கள் ? இந்த ஏழையினிடத்தில் இவ் வளவு கருணை உண்டாவதற்குக் காரணம் என்ன?’ என்று தன் குயில்மொழியால் கொஞ்சலாகக் கேட்டாள்.

அவன், சிவ, சிவ” என்று சொன்னனே ஒழிய, வேறு ஒன்றும் சொல்லவில்லை.

எல்லாம் சிவபெருமான் திருவருளால் நடைபெறு கின்றன என்று தாங்கள் குறிப்பிடுகிறீர்கள். நான் தங்கள் சுந்தா ரூபத்தையும், சிவபக்தியையும், பலத்தையும் கண்டு கண்டு ஆச்சரியக்கடலில் மூழ்குகிறேன். என்ன புண்ணியம் செய்தேனே! தங்கள் தரிசனம் கிட்டியதோடன்றிக் தங்களோடு ஒரே ரதத்தில் பிரயாணம் செய்யும் பாக்கிய மும் கிடைத்தது.'

ராஜகுமாரனுக்கு அவளோடு வாய்கிறந்து பேச வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. தன்பால் அவளுக்கு உண்டாயிருக்கும் மதிப்பை அவன் உணர்த்தான். அந்த மதிப்புக்கு உண்மையிலேயே பாத்திானுக வேண்டுமென்ற உணர்ச்சி அவனுக்கு வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/179&oldid=535418" இலிருந்து மீள்விக்கப்பட்டது