பக்கம்:அறுந்த தந்தி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறுந்த தந்தி

ஒரு விதமாக என் தாண்டிலில் அகப்படுவோர்களைக் கவனித்த பிறகு ஏழைகள்’ என்ற பட்டத்துக்கு உரிய மகாஜனங்களின் மேல் என் கண்பார்வையைத் திருப்பி னேன். முதலில் அந்தக் குழந்தையைத்தான் பார்த்தேன். அதன் தாய் முகத்தைக் கழுவிக்கொண்டு குங்குமப் பொட்டு வைத்திருந்தாள். குழந்தையின் முகத்தையும் நன்ருகத் துடைத்து மெல்லியதாகத் திருநீறு இட்டிருக் தாள். கால் பக்கத்தை அழுக்குத் துணியால் போர்த்திருக் தாள். -

குழந்தையின் முகத்தில் ஒரு விதமான களை இருந் தது. குழந்தைக்கு என்ன உடம்பு?’ என்று கேட்டுக் கொண்டே அவளை அணுகினேன். 'சாமி, காலெல்லாம் ஒரே புண் ஐயா’’ என்று சொல்ல ஆரம்பித்தபோதே அவ ளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. துணியைப் பிரித்துக் காட்டினுள். இரண்டு கால்களும் மிதமிஞ்சிய காப்பானல் புண்பட்டு ரத்தம் கசிந்துகொண் டிருந்தது.

‘சாமி, எங்கள் கண்ணுக்கு மருந்து போட்டுச் சொஸ்தப்படுத்த வேனும் சாமி; கடவுள் உங்களுக்கு நல்ல சுகத்தைக் கொடுப்பார்’ என்று அவள் சொன்ஞள். 'கடவுளா! இவள் யாரையா தம்மை ஆசீர்வாதம் செய்பவள் ! நமக்குச் சுகம் கொடுக்கக் கடவுளுக்கு என்ன அதிகாரம்? நாலு பணக்காரர் விட்டுக்குப் போய் வந்தால் அவர்கள் வீட்டுக்கு வரும் நோய் மூலமாக நமக்குச் சுகம் வரும். கடவுளுக்கு என்ன வியாதி வரப்போகிறது? அவர் நம்முடைய உதவியைத் தேடப்போகிருரா, என்ன?’ என்ற பைத்தியக்காரக் கேள்விகளை என் நெஞ்சம் கேட்டது. கர் மம், கடவுள் என்ற விஷயங்கள் உலக வாழ்வுக்குப் பயன் பட்டால்தான் என் மதிப்பைப் பெற முடியும். தர்மம் என்ற வார்த்தை எனக்குப் பயன்படுவதை நான் அதுப வத்தில் உணர்ந்தேன். இன்னும் கடவுளைப்பற்றி என் தொழில் மூலமாக உணர்ந்துகொள்ள முடியவில்லை. முரு கன் தாதுபுஷ்டி லேகியம்', 'விசுவநாதர் பல்பொடி' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/23&oldid=535264" இலிருந்து மீள்விக்கப்பட்டது