பக்கம்:அறுந்த தந்தி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 17

கடவுளின் பெயரை விளம்பரக் கருவியாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தால் அந்த அது பவம் கிடைக்க லாம். கைகால் கெட்டியாக இருக்கும் வரையில் அந்த வியாபாரத்துக்கு நான் போகவேண்டாம். உட்கார்க்க இடத்திலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்ச்சி வரும்போது கடவுளையும் ஒரு கை பார்த்து விடலாமென். பதே என் வாழ்க்கைத் திட்டம்.

'சமக்குத் தெரியாக கடவுளை, இவள் தனக்கு உட யோகமான கருவியாக்கிக்கொண் டிருக்கிருளே ; இவள் Այոi Գ* -

அவளைக் கேட்டேன்; பிறகுதான் தெரிந்தது உண்மை. தினந்தோறும் கடவுளின் பெயரையும் தர்மத்தின் காமத்தையும் சொல்லி அந்த இரண்டுக்கும் அடிமைப்பட்ட உள்ளங்களைத் தட்டிக் கனியவைக்கும் தொழிலே உடைய வள் அவள். அவள் புருஷனுங்கூடத்தான். "ஐயா! கால ளுப் போடு சாமி! தர்மவான்களே! புண்ணியவான்களே! கடவுள் உங்களுக்கு அமோகமான லாபத்தைத் தருவார்!’ என்று பஸ் நிறுத்தத்திலும் முச்சக்தி நாற்சந்திகளிலும் கின்று காகரத்த தொண்டையிலிருந்து ஆசீர்வர்தத்தைப் பொதுமக்களிடம் வலியப் பொங்கிய கருணையிஞல் பொழிந்துகொண்டு நிற்கிருர்களே, அக்தத் திருக்கூட்டத் தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். - ஆம். பிச்சைக்காரர்கள் ! 'கடவுள் காப்பாற்றுவார்!’ என்று சொல்லிக் சொல்லிப் பிச்சைத் தொழில் நடத்தும் அவள், கடவுள் உங்களுக்கு நல்ல சுகத்தைக் கொடுப்பார் என்ற வாழ்த் தைப் புதிதாகக் கற்றுக்கொண்டு வரவேண்டுமா? அவள் வாயைத் திறந்தால் போதும், அவள் மூச்சு விடுவது போலவே இயற்கையாக, சாமீ புண்ணியவானே! கால னத் தர்மம் செய்யுங்கோ சாt; கடவுள் காப்பாற்றுவார்’ என்ற சூத்திரமும் தான்ே கழுவி வந்துவிடுமே.

நோன் ஒரு பிச்சைக்காரி சாமீ; என்னிடம் காசு கிடையாது. அதோ அந்த அன்னதான சமாஜத்து

அறு. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/24&oldid=535265" இலிருந்து மீள்விக்கப்பட்டது