பக்கம்:அறுந்த தந்தி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 19

ருட உலகவாழ்க்கையில் எனக்கு வேண்டிய செளகரியங் கள் இன்ன என்று சிந்தித்துப் பழகிய மனத்துக்குப் பிற ருடைய செளகரியத்தையும் கினைத்துப்பார்க்க முடிந்தது. :எவ்வளவு நாளாக இப்படி இருக்கிறது?’’ இந்தக் கேள்வி ஐந்து நிமிஷ மெளனத்துக்குப் பிறகு என் வாயிலிருந்து வந்தது.

'நாலு மாசமாய் இருக்குது சாமி!” 'முன்னலே வருவதுதானே ?” வராததற்குக் காரணத்தை அவள் சொல்லவில்லை. 'இப்போதுதான் வர முடிந்தது சாt! குழந்தைக்கு மருந்து கொடுங்கள்” என்று சொன்னுள்.

அவள் குரலில் என்ன இருந்தது என்று எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. அது என் உள்ளத்தைத் தொட்டது. என் உள்ளத்தில் உண்டாகாத கர்ம உணர்ச்சியை உண்டாக்கியது. நான் வைத்தியம் செய்யச் சங்கற்பித்துக்கொண்டேன். அப்போது எனக்கு உண் டான இன்பத்தைச் சொல்ல முடியாது. அது வரையில் நான் உலகை ஏமாற்றி வந்தேன். தர்மத்தைப் பணயமாக வைத்துச் சூதாடினேன். அன்று விழித்துக்கொண்டேன். தர்மத்தின் புனிதமான பெயரைக் கெடுத்ததற்குப் பிராயச்சித்தம் செய்யத் துணித்துவிட்டேன். கடவுள் என்று கண்ணுக்குக் காணுத சக்தி ஒன்று உண்டு என்பதை யும் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினேன்.

அன்று முதல் அவள் தினந்தோறும் தவருமல் ஆஸ் பத்திரிக்குக் காலையில் வருவாள். நான் குழந்தைக்கு மருந்து போடுவேன். 'தர்ம ஆஸ்பத்திரி' என்ற என்னு டைய விளம்பரத்தைக் காட்டிலும் அந்தக் குழங்கை தான் எனக்குப் புகழை அதிகமாக வருவித்துக் கொடுத்தது என்று சொல்லலாம். நான் அதிக சிரத்தையோடு அந்தக் குழந்தையைக் கவனிப்பதையும், அது பிச்சைக்காரி யின் குழந்தை என்பதையும் உணர்ந்த உலகம் மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/26&oldid=535267" இலிருந்து மீள்விக்கப்பட்டது