பக்கம்:அறுந்த தந்தி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 21

ளேத்தான் பார்த்திருக்கிறேன்; பார்த்திருப்பது மட்டுமா? அவள் உருவந்தான் என் உள்ளத்தில் பதிந்திருக்கிறதே! அவன் அழுது கத்தின கத்தலைப் பார்த்தபோது எனக்கு வேறு சந்தேகம் வந்துவிட்டது. குழந்தையின் தாய் ஏன் வரவில்லை? வரமுடியாத நிலையில் அவள் இருக் கிருளோ! அல்லது...... அட சே! இதென்ன பேதைமை ! என் கண்ணில் ஏன் ஐயா ஜலம் வருகிறது? என்னேயும் ஏமாற்றி என் உள்ளம் உருகுகிறதே! உள்ளம் உருகுகிற வர்கள் பாக்கியவான்கள் என்று படித்திருக்கிருேமே ; நாம் பாக்கியவான்களின் கூட்டத்தில் சேர்ந்துவிட்டோமா என்ன! அவள் வராததற்குக் காரணம் என்ன? அவள் உலக வாழ்க்கையை விட்டு...' இந்த எண்ணந்தான் என் அடிவயிற்றைக் கலக்கியது. கண்ணேக் கலக்கி நீர் கசியச் செய்தது. 'கடவுளே! அப்படி நேரவேண்டாம்! நோக் கூடாது!’ என்று பிரார்த்தித்தேன்.

ஆச்சரியம்! கடவுளையாவது, நாளுவது, பிரார்த்திப்ப தாவது! இதென்ன இந்திர ஜாலம்! கடவுளைப்பற்றி அவ. ளல்லவா ஒவ்வொரு நாளும் சொல்லுவாள்? இன்று அவள் வரவில்லை; நான் சொல்லுகிறேன், அவள் எனக்கா கக் கடவுளைப் பிரார்த்திப்பாள். இன்ருே நான் அவளுக் காகக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்! இது வரையில் என் காது வழியாக நுழைந்துகொண் டிருந்த கடவுள் இன்று நேரடியாக என் உள்ளத்துள்ளே புகுந்துவிட்டாரே? அட, கடவுளே! தர்மமே ! பிச்சைக்காரப் பெருமாட்டியே!

'அவள் செளக்கியமா, அப்பா?” என்று கேட் டேன்.

"அவள் மூர்ச்சை போட்டு விழுந்து கிடக்கிருள் சாமி; நான் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தேன். பாவி எல்லாம் என்னலே வந்த வினே.”

'ஹா! மூர்ச்சையா! எங்கே? எப்படி? ஏன்? வா, போகலாம்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/28&oldid=535269" இலிருந்து மீள்விக்கப்பட்டது