பக்கம்:அறுந்த தந்தி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அறுந்த தந்தி

அவ்வளவு வேகம் எனக்கு எப்படி வந்ததோ தெரிய வில்லை. குழந்தை கதறுகிறது. அதன் காலில் ரத்தம் கசி கிறது. அவன் அழுகிமுன். இவ்வளவையும் மறந்துவிட்டு நான் என் கண்முன் இாாத பிச்சைக்காரியைத் தேடிப் புறப்பட்டேன்.

அவள் கீழே விழுந்து கிடந்தாள். அவன் அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து மெல்ல அழைத்துக் கொண்டு என் பின்னே வந்தான். தர்ம ஆஸ்பத்திரி'யில் கொண்டு வந்து அவளை உட்காா வைத்தான்.

'சாமீ, குழந்தைக்கு மருந்து போடுங்கோ. இதை ஒன்றும் சொல்லாதேயுங்கோ. கடவுள் சோதனை செய்

கிருர்’ என்று அவள் மெல்லிய குரலில் முறையிட்டாள்.

பிறகுதான் எனக்குக் குழந்தையின் ஞாபகம் வந்தது. அதன் காலைக் கவனித்தேன். ஆறிவந்த புண்ணின் மேல் ஆழமான கீறல் காயம்; அதிலிருந்து கசியும் ரத்தம்! குழந்தை துடிதுடித்து அழுது அழுது ஒய்ந்துவிட்டது. கான் அவசர அவசரமாகப் புண்ணே அலம்பி மருந்து வைத்துக் கட்டினேன்.

கட்டும்போதே, இந்தக் கீறல் எப்படி வந்தது?’’ என்று கேட்டேன். பதில் இல்லை. அவன் விம்மி விம்மி அழுதான்.

'இவள் ஏன் மூர்ச்சை போட்டு விழுந்தாள் ??? அதற்கும் பதில் இல்லை. அழுகை அதிகமாயிற்று.

“எதற்காக இவன் இப்படி அழுகிருன்?’ என்று அவளைக் கேட்டேன். -

'ஆது, பைத்தியம், அளுவுது’’ என்று புரியாத புதிரைப் போட்டாள். - r

என்ன சமாசாரம் ??

"அதையே கேளுங்கோ' என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/29&oldid=535270" இலிருந்து மீள்விக்கப்பட்டது