பக்கம்:அறுந்த தந்தி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 23

இதற்குள் குழந்தைக்குக் கட்டுக் கட்டி முடித்தேன். அவள் குழந்தையை வாங்கி மடிமேல் வளர்த்தித் தட்டி னுள். அவன் தன் கைகளால் முகத்தை மூடித் தேம்பித் தேம்பி அயர்ந்து போய் உட்கார்ந்திருந்தான்.

'என்ன, இப்படிப் பெண்பிள்ளை மாதிரி அழுகி மூயே, ஏன் அழுகிருய்? என்ன காரியம் செய்தாய்?” என்று கேட்டேன்."

அழுது ஒய்ந்து போய்ப் பிரம்மஹத்தி பிடித்தவன் மாதிரி அவன் உட்கார்ந்திருந்தான். என் கேள்விக்கு இனி யும் பதில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று அவன் கினைத்திருக்கவேண்டும். தலையை நிமிர்த்திச் சொல்லத் தொடங்கினுன்:

'சாமி, எல்லாம் பாவி சான் செய்த காரியம். இந்தக் குழந்தையைக் கொன்று போட்டுவிடக்கூடத் துணியும் பாதகன் நான். எங்கள் வாழ்வுக்கு விளக்காக இருந்த இக் தக் குழந்தை சிரிப்பதைப் பார்த்துப் பூரித்தாள் இவள். இது அழுவதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன் கான். இந்தக் குழந்தைக்குக் காலிலே புண் வந்தபோதே இவள் சொன்னுள். தர்மதுரை, நீங்கள் தர்மத்துக்கு வைத்தியம் செய்வதாகச் சொன்னுள். உடனே கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்ருள். நாலு மாசமாகக் கெஞ்சிள்ை. கான் இடம் கொடுக்கவில்லை.”

'ஏன்? இது உன் குழந்தைதானே? இவள் உன் சொந்தப் பெண்டாட்டிதானே?’ என்றேன்.

தைக் கேட்டவுடன் உசுப்பிவிட்ட பெண் புலி போல அவள் பேசினுள்: ‘'என்ன சாமி, அப்படிக் கேக்கு மீங்கோ! தெய்வம் சோதனை செய்யுது. பிச்சைக்காாப் பிழைப்பு கடத்துகிருேம்.’’

அவள் பெண்மையில் பிச்சைக்காரத்தனம், இல்லை; சுதந்த வீரம் அதில் தொனித்தது. மகாராணியின் பெண் மைக்கு எத்தனே உயர்வு உண்டோ, அத்தனை உயர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/30&oldid=535271" இலிருந்து மீள்விக்கப்பட்டது