பக்கம்:அறுந்த தந்தி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - . அறுந்த தந்தி

அந்தப் பிச்சைக்காரியின் பெண்மையிலேயும் இருக்கிற

தென்பதை நான் உணர்ந்தேன். ஐயோ, நாம் புண்ணில் கோலை இட்டோமே !’ என்று வருக்தினேன்.

'சாமி, என் பெண்டாட்டி, என் குழந்தை என்று சொல்ல எனக்கு வாய் இல்லை. நான் அப்படித்தான் இருக் றேன். இல்லாவிட்டால் இப்படியெல்லாம் பேய் விளை யாட்டு நடத்துவேஞ?”

சமாசாரத்தைச் சொல் அப்பா’ என்று அவனே முடுக்கினேன்.

'நான் என்னத்தைச் சொல்வது? என்னுடைய பிச்சைக்காரத் தொழிலில் இந்தக் குழந்தையையும் கூட் டாளியாக்கிக்கொண்டேன்.

அவன் மேலே கதையைச் சொன்னன். குழந்தை யைக் கூட்டாளியாக்குவதாவது! அது வாய்கிறந்து பேசுமா? பிச்சை கேட்குமா? அதன் கால் புண்ணேக் காட்டி மனிதர்களின் மனத்தில் இாக்கத்தைச் சுரக்கச்செய் தான் அவன். அவனுடைய வியாபாரத்துக்குக் குழந்தை பெரிதாகத் தோற்றவில்லை; அதன் கால் புண்தான் அவசிய மாக இருந்தது. அவனுக்கு லாபம் சம்பாதித்துத் தரும் முதல் அது. 'சாமி, மருந்து வாங்கப் பணம் இல்லை; இந்த ஏழை முகம் பாருங்கி! ஐயா, தர்மவான்களே! புண்ணியவான்களே! காலணுப் போடுங்க மகராஜர்களே! உங்களுக்குக் கடவுள் கிருபை பண்ணுவார்’ என்று விளம்பரம் செய்ய அது உதவியது. அவனுடைய தொழில் முறையில் அவன் எண்ணம் பலித்தது. அதாவது : தன் அபிநயங்களையும் குரலையும் கொண்டு சம்பாதிப்பதைக் காட்டிலும், தன் மடியில் குழந்தையைக் கிடத்தி அதைக் காட்டிக் காட்டிப் பிச்சை கேட்பதில் அதிக லாபம் இருக் கிறது என்ற தத்துவத்தை அவன் அ துபவத்தில் தெரிந்து காண்டிான். 'ஆகட்டும், ஆகட்டும்’ என்று ஆஸ்பத் திரிக்குப் போகாமல் காலம் கடத்தியதற்கு அந்த ஆண் உள்ளத்தில் தலைதுாக்கி நின்ற தொழிலாசைதான் காரண்ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/31&oldid=535272" இலிருந்து மீள்விக்கப்பட்டது