பக்கம்:அறுந்த தந்தி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்ய கடிகர் 35

பட்டினி போட்டிருந்தார் அல்லவா? அங்கப் பசியால் அவர்களுக்கு எல்லாம் ருசியாயிருந்தன.

ஒவ்வொரு காட்சியும் முடிந்தபோது குமரகுருபார் ஹாஸ்ய நடிகருக்கு ஆசார உபசாரம் செய்தார்; 'உங்கள் அடிப்பு அபாரம்’ என்று பாராட்டினர்.

கடைசிக் காட்சி ஒருவிதமாக முடிந்தது. சபையில் உள்ளவர்கள் மாலைகளைக் கொண்டுவந்திருந்தார்கள். கடராஜ பிள்ளையின் கழுத்தில் போடவேண்டும் என்று ஆத்திரப்பட்டார்கள். ஆனல் அவர், முடிந்தவுடனே உள்ளே போய்விட்டார். கூட்டத்தின் ஆரவாரம் தாங்க முடியவில்லை. -

நடராஜ பிள்ளை உள்ளே போனவுடன், அங்கிருந்த ஒருவர், "இதோ உங்களுக்குத் தந்தி' என்று கொடுத் தார். 'தந்தியா?’ என்று கேட்டுக்கொண்டே நடராஜ பிள்ளை கீழே விழுந்து மூர்ச்சை ஆனர்.

தந்தி ஏழு மணிக்கே வந்துவிட்டது. முன் ஏற் பாட்டின்படி குமரகுருபரர் வேறு யாருக்கும் தெரியாமல் அதை வாங்கி வைத்துக்கொண்டார். அதைப் பிரித்துப் பார்த்து, நாடகமெல்லாம் முடிந்த பிறகு மெல்ல நடராஜ பிள்ளைக்குச் செய்தி தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந் தார். தந்தியில் வேறு என்ன இருக்கப்போகிறது? எதிர்பார்த்ததுதானே?-இந்த கினேப்போடு அவர் வேத னே ப்பட்டுக்கொண்டிருந்தார். அதைப் பிரிக்காமல், படிக் காமல், நாடகம் முடிய வேண்டுமே!’ என்ற கவலையோடு ஒவ்வொரு கணமும் கவனிக்க வேண்டியதைக் கவனித்துக் கொண்டு சுறுசுறுப்பாக இருந்தார். நாடகம் முடிந்த வுடனே பொதுஜனங்களின் கலவரம் அதிகமாகிவிட்டது. நடராஜ பிள்ளையைப் பார்க்காமல் கூட்டம் கலையமாட் டேன் என்ற பிடிவாதம் பிடித்தது.

அவர் கையிலே தந்தி. நடராஜ பிள்ளைக்குச் செய்தி யைத் தெரிவிக்காமல் இவ்வளவு கோம் இருந்ததே பாவம். இனியும் இந்த முரட்டு ஜனங்களுக்காகத் தாமதம் செய்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/42&oldid=535283" இலிருந்து மீள்விக்கப்பட்டது