பக்கம்:அறுந்த தந்தி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அறுந்த தக்தி

மகா பாவம்! கடவுள் விட்ட வழி விடட்டும். இதை அவருக்கு அனுப்பிவிடுவோம். நாம் இங்கே இருந்து கூட் டத்தைச் சமாளிப்போம். துக்கச் செய்தியைச் சொன்னுல் கூட்டம் சமாதானம் ஆகிவிடும்' என்ற யோசனையில் குமர குருபார் அதை உள்ளே அனுப்பினர்.

நடராஜ பிள்ளை மூர்ச்சையாகி விழுந்தவுடன் ஒருவர் அவர் முகத்தில் ஜலத்தைத் தெளித்தார். மற்ருெருவர் தந்தியைப் பிரித்துப் படித்தார். 'குழந்தை இப்போது தான் கண்ணே விழித்துக்கொண்டது. வாயைத் திறந்து தாகத்துக்குக் கேட்டது. கடவுள் காப்பாற்றினர். இனிக் குழந்தைக்கு அபாயம் இல்லை' என்று இருந்தது. 'ஹா!' என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் படித்தவர். அந்தக் கூச்சலும் சைக்தியோபசாரமும் நடராஜ பிள்ளைக்கு உணர்வை உண்டாக்கின. ஐயா, உங்கள் குழந்தை பிழைத்துக்கொண்டது' என்ற வார்த்தைகள் அவர் காதில் ஜிலுஜிலுவென்று விழுந்தன. தந்தியைப் பார்த்தார். முகத்தில் தெளிவு உண்டாயிற்று. மெல்ல எழுந்திருந்தார். மேடைக்கு அழைத்துச் சென்ருர்கள். அப்போதுதான் குமரகுருபரர், 'குழந்தையின் மாணுவஸ் தையையும் கினேக்காமல் அவர் இங்கே வந்தார். இவ்வளவு நோம் நடித்தார். அழுகையில் மூழ்கி இருக்கவேண்டிய அவர் உங்களைச் சிரிப்பில் மூழ்கச் செய்தார். தர்மம் தலை காக்கும் என்று எண்ணினேன். ஆனல் இன்று தந்தி வந்தது ; அதையும் நான் மறைத்தேன். கடவுள் இரங்க வில்லை.....' என்று பேசிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்தாற்போல், 'கடவுள் கருண காட்டினர்’’ என்ற குரல் உச்சஸ்தாயியில் உள்ளிருந்து வந்தது. ராஜ பார்ட்டு ரங்கசாமியின் குரல் அது. மேடைமீது வந்த நடராஜ பிள்ளை மெல்லிய குரலில் கண்ணிர் வழிந்து ஒடக் கைகளைக் குவித்துக்கொண்டே, "தர்மம் தல்ை காத்தது. உங்கள் அன்பு என்னேக் காப்பாற்றியது, குழந்தைக்கு அபாயம் இல்லை’ என்று சொன்னர். அவர் முகத்தில் உண்மையாகவே லேசான புன்னகை எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/43&oldid=535284" இலிருந்து மீள்விக்கப்பட்டது