பக்கம்:அறுந்த தந்தி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அறுந்த தந்தி ாம் புடைத்ததுபோல் இருந்தது. அந்தச் சின்னஞ் சிறு குழந்தைக்குக்கூட வாழைப்பழத் தோல் தின்னும் கலை தெரிந்திருந்தது.

யார் வீட்டிலாவது விசேஷம் நடந்தால் எச்சில் இலை போடுவார்களே, அதற்கு நாய்களும் பிச்சைக்காரர்களும் போட்டியிடுவார்கள். அந்தப் போராட்டத்துக்குக்கூட இப்போது வழியில்லாமல் போய்விட்டது. வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான பேர் சாப்பிட்டாலும் வெளியிலே இலை போடுவதில்லை. ரேஷன்காரன் வந்து கணக்கெடுத்து விட்டால் என்ன செய்வது? அத்தனே இலைகளையும் என்ன பண்ணுவார்களோ? பகவானுக்கே வெளிச்சம்! எறிகிற வஸ்துவுக்குக்கூடப் பஞ்சம் வந்துவிட்டது.

அவள் என்னதான் செய்வாள் ! எங்கெங்கே மனிதர் கூட்டம் கூடுகிறதோ அங்கெல்லாம் தன் காட்சிப் பொம் மையாகிய குழந்தையையும் சுமந்துகொண்டு போய் உட் கார்ந்து கொள்வாள். திருவாதிரைத் திருநாள் : நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்த திருநாள். கோயி லுக்குள் ஜே ஜே என்ற கூட்டம். எப்போதும் மூன்றன வுக்கு விற்கும் தேங்காய் அன்று ஐந்தன. அப்படியும் கடைகளில் போதிய அளவு தேங்காய் இல்லை. வாழைப்பழம் என்று பேருக்குக் காம்பிலே ஒட்டிக்கொன் டிருக்கும் வஸ்துக்களையெல்லாம் அன்று பக்தர்கள் வில்ை கொடுத்து வாங்கினர்கள். -

வருஷத்துக்கு ஒரு நாள், திருவாதிரை. அடே திரு வாதிரையைப்போல் எத்தனையோ உற்சவங்களும் வரு ஷத்துக்கு ஒரு நாளாக அடுத்தடுத்து வருகின்றனவே! மொத்தத்தில் வாழ்நாளில் பாதி திருநாளாகவே வைத் திருக்கிருர்களே!' என்று கேட்கலாமா? வருஷத்துக்கு ஒரு நாள், வருஷத்துக்கு ஒரு நாள்' என்ற பல்லவியைப் பாடுவது நிற்கவே கிற்காது.

அந்த ஒரு நாளில் ஆனந்தமயமான மூர்த்தி

ஆனந்தமயமான தாண்டவத்தைச் செய்தான். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/57&oldid=535298" இலிருந்து மீள்விக்கப்பட்டது