பக்கம்:அறுந்த தந்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி - 55

றேன்' என்று ஒரு நாள் அவளிடம் சொன்னன். அது முதல் தவருமல் பி. எஸ். ஹைஸ்கூலின் வாசலில் அவள் வந்து காத்துக்கொண் டிருந்தாள். மணிக்கணக்கு அவ ளுக்கு எங்கே தெரியப்போகிறது? பத்து மணிக்கே வந்து விட்டாள். பணம் கிடைக்கும் என்ற ஆவலால் வெயிலில் உட்கார்ந்துகொண் டிருந்தாள். ஒரு மணிக்குக் கோடா லன் வந்தான். ஆம், அவன் பெயர்தான். பசுக்களிடத்தி அலும் குழந்தைகளிடத்திலும் கருணே பூக்கும் கண்ண லுடைய அழகிய பெயர். அதோ, அந்த ஆலமரத்து நிழலிலே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலிலே குழக் தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிருயே!' என் முன் அவன்.

இதென்ன..! அவளுக்குக்கூட அக்கக் குழந்தையிடம் அத்தனே கரிசனம் இருக்காதுபோல் இருக்கிறதே! அவ ளுக்கு வெயிலும் தெரியவில்லை, கிழலும் தெரியவில்லை. அந்தச் சிறு பிள்ளையினுடைய முகந்தான் அவள் உள்ளத் திலே குடிகொண் டிருந்தது.

அன்று அவன் இரண்டணுக் கொடுத்தான். அது முதல் அதுவே வழக்கமாகிவிட்டது. காலத்து நாள் வந்த கிதானத்தால் அவளுக்கு ஒரு மணி இன்ன நேரம் என்ற கால வரையறை திட்டம்ாகத் தெரிக்கது. அரை மணிக்கு முன்னலே அவள் வந்து பக்கத்திலுள்ள ஆலமரத்து கிழ வில் காத்திருப்பாள். ஒரு மணிக்குப் பிள்ளைகளெல்லாம் வெளியிலே வரும்போது ஆலமரத்தடிக்கு வந்து கோபாலன் பிச்சைக்காரிக்கு இரண்டணுக் கொடுப்பான். அவள் குழக் தையைப் பற்றி விசாரிப்பான். மற்றப் பையன்களெல்லாம் அதே ஆலமரத்தடியிலே சுடச்சுட நிலக்கடலை விற்கும் வியாபாரியிடம் போவார்கள் ; கடலை வாங்கித் தின்பார்கள். மாம்பழத்தைத் துண்டு போட்டு விற்கும் கிழவியிடம் போவார்கள்; அதை வாங்குவார்கள். அந்த ஆலமரம் இந்தச் சில்லறை வியாபாரத்துக்கும் இளம்பிள்ளையின் தர்மத்துக்கும் நிழல் கொடுத்துக்கொண்டு நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/62&oldid=535303" இலிருந்து மீள்விக்கப்பட்டது